Last Updated:
வீட்டில் இருந்தபடியே பிஎஃப் இருப்பை சரிபார்க்க எஸ்எம்எஸ், ஆன்லைன், மிஸ்டு கால் மற்றும் உமாங் ஆப் ஆகிய நான்கு எளிய வழிகளை ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவற்றில் பிஎஃப் இருப்பை எப்படி சரிபார்ப்பது என்பதை இனி பார்ப்போம்.
ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையம் (EPFO) 2024-25 நிதியாண்டிற்கான பிஎஃப் வட்டி விகிதத்தை 8.25% என அறிவித்துள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) வட்டி விகிதம் 8.25% என EPFO அறிவித்ததைத் தொடர்ந்து, பிஎஃப் சந்தாதாரர்கள் பலரும் அந்த தொகை தங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள ஆவலோடு இருக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சில சந்தாதாரர்கள் தங்களது கணக்குகளில் வட்டி வரவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, வீட்டில் இருந்தபடியே பிஎஃப் இருப்பை சரிபார்க்க எஸ்எம்எஸ், ஆன்லைன், மிஸ்டு கால் மற்றும் உமாங் ஆப் ஆகிய நான்கு எளிய வழிகளை ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவற்றில் பிஎஃப் இருப்பை எப்படி சரிபார்ப்பது என்பதை இனி பார்ப்போம்.
1. ஆன்லைனில் இணையதளம் மூலமாக: epfindia.gov.in
- இதற்கு முதலில் https://www.epfindia.gov.in என்கிற இணையதளத்திற்கு செல்லவும்.
- உங்கள் UAN எண், பாஸ்வேர்டு மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
- “இ-பாஸ்புக்” என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது உங்கள் கணக்கில் உள்ள மொத்த பிஎஃப் இருப்பை பார்க்க முடியும்.
2. உமாங் ஆப் மூலம் பிஎஃப் இருப்பை பார்க்க..
- முதலில் உமாங்க் ஆப்பை தேர்வு செய்யுங்கள்.
- ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) என்பதைத் தேர்வு செய்யவும்.
- பின்னர், பணியாளர் மைய சேவைகள் (Employee Centric Services) என்பதை தேர்வு செய்து அதில், பாஸ்புக்கைக் காட்டு (View Passbook) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் UAN எண் மற்றும் EPFO பாஸ்வேர்டை உள்ளிடவும்.
- பின்னர், பதிவு செய்த உங்களது மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ அதில் உள்ளிடவும்.
- இப்போது உங்கள் பிஎஃப் இருப்பை பார்க்க முடியும்.
3. எஸ்எம்எஸ் மூலமாக பிஎஃப் இருப்பை தெரிந்து கொள்ள..
- உங்களது பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து EPFOHO UAN என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.
- நீங்கள் உங்களது தாய் மொழியில் தகவலைப் பெற விரும்பினால், எஸ்எம்எஸ்-இல் மொழிக்குறியீட்டையும் சேர்க்கலாம். (எ.கா. தமிழ் – EPFOHO UAN TAM)
4. மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டu கால் கொடுக்கவும்.
- சில விநாடிகளில் உங்கள் பிஎஃப் இருப்பு பற்றிய தகவல் உங்களுக்கு எஸ்எம்எஸ்-ஆக அனுப்பி வைக்கப்படும்.
July 06, 2025 4:48 PM IST