முதலில், UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தி EPFO உறுப்பினர் போர்ட்டலில் உள்நுழையவும். ‘View’ பகுதிக்குச் சென்று, சுயவிவரத்தில் புகைப்படம் மற்றும் முகவரியின் முழுமையான விவரங்கள் உள்ளதா எனச் சரிபார்க்கவும். ‘Manage’ பகுதியில் உள்ள இ-நாமினேஷன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். ‘Yes’ என்பதைக் கிளிக் செய்து, குடும்ப அறிவிப்பைப் புதுப்பிக்கவும். ‘Add Family Details’ பகுதியில் பரிந்துரைக்கப்படுபவரின் விவரங்களை (ஆதார், பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம்) உள்ளிட்டுச் சேமிக்கவும். ‘EPF Nomination’ பகுதியில் ஒவ்வொரு பரிந்துரைக்கப்படுபவருக்கும் ஒரு சதவீதப் பங்கை ஒதுக்கிச் சேமிக்கவும். தேவைப்பட்டால், ‘EPS Nomination’ விவரங்களைப் புதுப்பிக்கவும். இறுதியாக, ‘இ-சைன்’ மூலம் ஆதார் OTP-ஐ உள்ளிட்டு, டிஜிட்டல் கையொப்பத்தை நிறைவு செய்ய வேண்டும்.


