எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனத்தின் (EPFO) பேரோல் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கிட்டத்தட்ட 14.41 லட்சம் புது மெம்பர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. அதிலும் இந்த எண்ணிக்கையில் 57 சதவீத நபர்கள் இளைஞர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
நாட்டின் சீரமைக்கப்பட்ட துறையில் உருவாக்கப்பட்ட அதிகரித்த வேலைவாய்ப்பு காரணமாக 14.41 லட்ச நபர்கள் மார்ச் மாதத்தில் சேர்ந்துள்ளதாக எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனத்தின் (EPFO) பேரோல் தரவு சுட்டிக்காட்டுகிறது.
பே-ரோல் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், மார்ச் மாதத்தில் மட்டும் 7.47 லட்ச புது மெம்பர்கள் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. அதில் 56.83 சதவீத நபர்கள் 18 முதல் 25 வயது சார்ந்தவர்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
“சீரமைக்கப்பட்ட பணியில் சேரும் பெரும்பான்மையான நபர்கள் இளைஞர்களாக இருப்பதும், அதிலும் குறிப்பாக முதல் முறையாக பணியில் சேருபவர்களாக இருப்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது”, என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7.47 லட்ச புதிதாக சேர்ந்துள்ள மெம்பர்களில் பாலினம் வாரியாக பிரித்து பார்க்கும் பொழுது அதில் 2 லட்சம் புதிய பெண் மெம்பர்கள் சேர்ந்திருப்பது பே-ரோல் தகவல் மூலமாக தெரிகிறது. மேலும் இந்த மாதத்தில் மொத்த பெண் மெம்பர்களின் எண்ணிக்கை 2.90 லட்சமாக உள்ளது. பெண் மெம்பர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு தொழில் துறையில் தற்போது நடந்து வரும் மிகப்பெரிய மாற்றத்திற்கு உதாரணமாக அமைகிறது.
அதுமட்டுமல்லாமல் தோராயமாக 11.80 லட்சம் மெம்பர்கள் EPFO இல் இருந்து வெளியேறி மீண்டும் இணைந்துள்ளதாக பே-ரோல் தகவல் குறிப்பிடுகிறது. இந்த மெம்பர்கள் அனைவரும் ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாற்றமாகி EPFO இன் கீழ் வரக்கூடிய நிறுவனங்களில் மீண்டும் இணைந்துள்ளனர். மேலும் அவர்கள் தங்களுடைய நீண்ட கால பொருளாதார நலனை கருத்தில் கொள்வதன் மூலமாகவும், சமூக பாதுகாப்பை நீட்டித்துக் கொள்வதற்கும் இறுதி செட்டில்மெண்டிற்கு விண்ணப்பிக்காமல் தங்களுடைய சேமிப்பை டிரான்ஸ்ஃபர் செய்ய தேர்வு செய்துள்ளனர் என்பது இதன் மூலமாக தெரிய வருகிறது.
தொழில்வாரியான தகவல்களை ஒவ்வொரு மாதமும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது உற்பத்தி, சந்தைப்படுத்தல் சேவைகள், கணினிகள் பயன்பாடு, உணவகங்கள், சார்ட்டர், மீன் பதப்படுத்துதல் மற்றும் அசைவ உணவுப் பதப்படுத்துதல், பீடி சுற்றும் தொழில் போன்ற துறைகளில் வேலை செய்யும் மெம்பர்களின் வளர்ச்சி தெரிய வருகிறது.
நாட்டின் சீரமைக்கப்பட்ட துறையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பிரகாசமாக இருப்பது இந்த தகவல்களின் அடிப்படையில் நமக்கு தெரிய வருகிறது. இது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சிறந்த ஒரு உதாரணமாகவும் அமைகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)