பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து உறுப்பினர்களுக்கும் சில முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் செய்யப்படும் நிதி பரிவர்த்தனைகளின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சமூகபாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது ஒவ்வொரு மாதமும் சுமார் 7.5 கோடி உறுப்பினர்கள் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் பங்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு கிளைம்களுக்கு சில எளிமையான மாற்றங்களை EPFO செய்துள்ளது. அதன்படி, இனி, EPFO விதி 68பி-யின்படி வீட்டுவசதி மற்றும் 68கே விதியின்படி, கல்வி மற்றும் திருமணத்திற்கு ரூ.1 லட்சம் வரையிலான கோரிக்கைகளை எளிதாக மேற்கொள்ளலாம். இதற்கு அதிகாரிகளின் அப்ரூவல் எதுவும் தேவையில்லை.
அதேபோல், கிளைம் நடவடிக்கைகளுக்கு விரைந்து தீர்வளிப்பதோடு, தற்போதைய புவியியல் அதிகார வரம்பை மீறி, வேறு எங்கிருந்தாலும் கிளைம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. ஆதார் விவரங்கள் இல்லாமலேயே மரண கிளைம்களை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. EPFO போர்ட்டலில் ஆதார் எண்ணை பதிவிடாவிட்டாலும், இறந்தவருக்கும், உரிமை கோருபவருக்குமான உறவு நிலையை உறுதி செய்து, கிளைம் செய்யலாம்.
இதையும் படிங்க:
உ.பி.யில் சரிந்த பாஜக – யோகி ஆதித்யநாத்துக்கு சிக்கலா?
அதேபோல், வருங்கால வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை கிளைம் செய்ய காசோலையின் நகல் மற்றும் வங்கி பாஸ்புக்கை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆன்லைன் கிளைம் செட்டில்மெண்டுகளை விரைவு படுத்துவதோடு, சரியான நேரத்தில் காசோலை மற்றும் வங்கி பாஸ்புக் ஆகியவற்றை சமர்ப்பிக்க தவறியதால் நிராகரிக்கப்படும் என்ற எண்ணிக்கையும் குறைக்கப்படும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
