இந்த தாமதம் உங்களுடைய வட்டி வருமானத்தை பாதிக்குமா?: உங்களுடைய பாஸ்புக்கில் இந்த கிரெடிட் தாமதமாக காண்பிக்கப்பட்டாலும் EPFO-ஐ பொறுத்தவரை, உங்களுடைய வட்டி பணமானது மாத அடிப்படையில் கணக்கிடப்பட்டு, நிதியாண்டின் இறுதியில் வழங்கப்படுகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.25% எனில், உங்களுடைய பேலன்ஸ் தொகைக்கான வட்டி பணமானது அக்கவுண்டில் ஏப்ரல் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிரெடிட் செய்யப்படும். எனவே, உங்களுடைய பணத்தை ஒருபோதும் நீங்கள் இழக்க மாட்டீர்கள்.


