சில காரணங்களுக்காக நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு இந்தப் பணத்தை திரும்பப் பெறலாம். அதாவது குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடு கட்டுதல் அல்லது மருத்துவச் செலவு ஆகியவை அடங்கும். இருப்பினும், கிளைம் செயல்பாட்டின்போது ஏற்படும் சிறிய தவறுகள் உங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். உங்கள் EPF கோரிக்கை நிராகரிப்புக்கான காரணங்களையும், அவற்றை எவ்வாறு சரிபார்ப்பது என்பதையும் பற்றி தெரிந்து கொள்வோம்.


