Last Updated:
EPF கிளைம்கள் நிராகரிக்கப்படுவதற்கான சில பொதுவான காரணங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மாத சம்பளம் பெறும் ஊழியர்களைப் பொறுத்தவரை பிராவிடன்ட் ஃபண்ட் என்பது பணி ஓய்வுக்குப் பிறகு அல்லது கஷ்டமான காலங்களில் உதவுவதற்கான ஒரு பாதுகாப்பு வலையாக செயல்படுகிறது என்று சொல்லலாம். எனினும், PF பணத்தை வித்டிரா செய்வது என்று வரும்போது பல ஊழியர்கள் கசப்பான அனுபவங்களைப் பெறுகின்றனர்.
எதிர்பாராத பிரச்சனைகளால் அவர்களுடைய கிளைம்கள் நிராகரிக்கப்படுகின்றன. எனவே, EPF கிளைம்கள் நிராகரிக்கப்படுவதற்கான சில பொதுவான காரணங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆதார், PAN அல்லது வங்கி விவரங்கள் விடுபட்டு இருந்தாலோ அல்லது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் அது சரிபார்க்கப்படாமல் இருந்தாலோ உங்களுடைய கிளைம் நிராகரிக்கப்படலாம்.
EPFO பதிவுகளில் உள்ள உங்களுடைய தனிநபர் விவரங்கள் கிளைம் படிவத்தில் உள்ள விவரங்களோடு பொருந்தாத பட்சத்தில் உங்களுடைய கிளைம் ரிஜெக்ட் செய்யப்படலாம். ஆதார் மற்றும் PF போர்ட்டலில் உள்ள உங்களுடைய பெயரில் சிறிய அளவிலான எழுத்துப் பிழைகள் இருந்தால்கூட அதனால் ரிஜெக்ஷன் நடைபெறலாம்.
வங்கி அக்கவுன்ட் நம்பர்கள் அல்லது IFSC குறியீடுகளை தவறாக குறிப்பிட்டு இருந்தால் உங்களுடைய கிளைம் நிச்சயமாக நிராகரிக்கப்படும். வாழ்க்கைத் துணையோடு அல்லாமல் வேறுவிதமான எந்த ஜாயின்ட் பேங்க் அக்கவுன்ட்டுகளையும் EPFO ஏற்காது. UAN உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு ஆக்டிவாக இல்லாதபட்சத்தில் அல்லது பேங்க் ஒருங்கிணைப்பு காரணமாக IFSC குறியீடு மாறி இருந்தால் கிளைம்கள் நிராகரிக்கப்படும்.
உங்களுடைய ஆதார் எண்ணை யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பருடன் இணைப்பது கட்டாயம். ஆதார் சரிபார்க்கப்படாமலும், இணைக்கப்படாமலும் இருந்தால் உங்களுடைய வித்டிராயல் கோரிக்கையை EPFO ரிஜெக்ட் செய்துவிடும்.
செயலற்ற அல்லது பதிவு செய்யப்படாத UAN பயன்படுத்தி தாக்கல் செய்யப்படும் கிளைம்கள் நிச்சயமாக நிராகரிக்கப்படும்.
EPFO விதிகளின்படி, குறிப்பிட்ட சில நிபந்தனைகளின்கீழ் மட்டுமே PF பணத்தை உங்களால் வித்டிரா செய்ய முடியும். நீங்கள் கொடுத்துள்ள காரணம் தகுதி பெறும் பிரிவுகளின் கீழ்வராத பட்சத்தில் உங்கள் கிளைம் நிராகரிக்கப்படும்.
கிளைம் படிவத்தில் உள்ள பணி சேவை காலம் EPF அல்லது நிறுவனத்தின் பதிவுகளோடு பொருந்தாதபோது கிளைம் பாதிக்கப்படலாம்.
செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவையில் இருந்தாலோ அல்லது பணிபுரியும் நிறுவனம் விவரங்களை சரிபார்க்காமல் இருந்தாலோ கிளைம் ரிஜெக்ட் செய்யப்படும்.
EPF கிளைம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
- ஆவணங்களை மீண்டும் சரிபார்த்து, சரியான காரணத்துடன் அதனை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
- எப்பொழுதும் சரியான கிளைம் படிவங்களை தேர்வு செய்யுங்கள்.
- கிளைம் ஸ்டேட்டஸ் என்ன என்பதை வழக்கமான முறையில் நீங்கள் கண்காணிக்க வேண்டும்.
- தேவைப்பட்டால் அருகில் உள்ள EPF அலுவலகம் அல்லது உங்களுடைய நிறுவனத்தின் உதவியை நாடலாம்.


