Last Updated:
இங்கிலாந்தில் அமெரிக்க தளத்தை தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்ற சநதேகத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் முக்கிய விமானப் படைத் தளத்தின் மீது நடத்தப்பட இருந்த பயங்கரவாத தாக்குதல் சதி திட்டத்தை அந்நாட்டு காவல்துறையினர் முறியடித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ‘RAF ஃபேர்ஃபோர்ட்’ விமானப் படைத் தளத்தை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வருவதற்கு எதிராக ஈரான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், அந்த விமானப் படைத் தளத்தைக் குறிவைத்து நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக வந்த 3 வாகனங்களை காவல்துறையினர் மடக்கி சோதனையிட்டனர். அப்போது வாகனங்களில் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, வாகனங்களில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவ இடத்தைச் சுற்றி 400 மீட்டர் தூரத்திற்குப் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வெடிபொருட்களுடன் பயங்கரவாத தாக்குதலுக்குச் திட்டமிட்டதாகக் கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாத சதித்திட்டத்திற்கும் ஈரானுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் இங்கிலாந்து காவல்துறை விசாரித்து வருகிறது.

