அதனை நிராகரித்த ஜடேஜா சதம் விளாசினார். பின்னர், இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டன் ஹாரி ப்ரூக், வாஷிங்டன் சுந்தரை அணுகிய போது, அவரும் டிரா வாய்ப்பை நிராகரித்து விட்டு, சதம் அடித்தார். களத்தில் இந்த சம்பவங்கள் நடந்துகொண்டிருந்தபோது இந்திய கேப்டன் ஷுப்மன் கில்லும் கேலரியில் இருந்து டிரா செய்ய எந்த ரியாக்சனும் காண்பிக்காமல் இருந்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஸ்டோக்ஸ் திகைத்துப் போய் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.