புதிய மொபைல் போன் வாங்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் கையில் பெரிய தொகை இல்லை என்று நினைப்பவர்களுக்காகவே EMI வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் உங்களுக்கு பிடித்த மொபைல் போனை வாங்கிக் கொண்டு தவணை முறையில் அதற்கான பேமெண்ட் செலுத்தலாம். எனினும் இந்த வசதியை பயன்படுத்தி மொபைல் போன் வாங்குவதற்கு முன்பு நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு சில முக்கியமான விஷயங்கள் உள்ளன.
EMI என்பது ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட ஒரு தேதியில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையை கடன் வழங்குனருக்கு கடன் பெற்றவர் கொடுக்க வேண்டும். EMIகள் மூலமாக ஒருவர் வட்டி மற்றும் அசல் ஆகிய இரண்டையும் சேர்த்து கட்டி வருவார் என்பதால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வருடங்கள் அல்லது மாதங்களுக்கு பிறகு முழு கடனும் அடைந்துவிடும்.
EMIகள் பொதுவாக பர்சனல் லோன், ஹோம் லோன், கார் லோன் மற்றும் AC, மொபைல் போன் ஆகியவற்றிற்கான லோன்கள் போன்ற பல்வேறு வகையான லோன்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. EMIஇல் மொபைல் போன் வாங்கும்போது, அதில் அடங்கியுள்ள வட்டி விகிதங்கள், மறைமுக கட்டணங்கள் மற்றும் போனின் ஒட்டுமொத்த தொகை ஆகிய அனைத்தையும் நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.
இப்போது இந்தியாவில் EMI முறையில் மொபைல் போன் வாங்கும்போது தவிர்க்க வேண்டிய சில தவறுகள் பற்றி பார்க்கலாம்:
பல கடன் வழங்குனர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மொபைல் போன்களுக்கு EMI ஃபைனான்ஸ் முறையை வழங்குகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் எல்லா இடங்களிலும் வழங்கப்படும் வட்டி விகிதங்கள், ப்ராசசிங் கட்டணம் மற்றும் பிற விதிகள் போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து, எது சிறந்ததாக இருக்கும் என்பதை லோன் வாங்குவதற்கு முன்பு முடிவு செய்ய வேண்டும்.
EMI மூலமாக போன் கிடைக்கிறதே என்பதற்காக உங்களுடைய பட்ஜெட்டுக்கு மீறி ஒரு பொருளை வாங்கக் கூடாது. ஒரு புதிய போனுக்கான பட்ஜெட்டை நீங்கள் உருவாக்கும்போது, அது நீங்கள் செலுத்தும் வட்டி மற்றும் போனின் ஒட்டுமொத்த தொகையை விட அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதையும் படிக்க: Indian Railways: ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் – பட்ஜெட்டில் வெளியாகப்போகும் செம அறிவிப்பு
எந்த ஒரு லோன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பும் அதனை முழுவதுமாக படித்துப் பார்க்கவும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டி விகிதம், ப்ராசசிங் கட்டணங்கள் மற்றும் பிற மறைமுக கட்டணங்கள் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். விதிகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்கவும். இதில் EMI திட்டத்தின் கால அளவு, அபராதங்கள் இல்லாமல் முன்கூட்டியே பணத்தை செலுத்துவதற்கான வசதி மற்றும் பேமெண்ட் செலுத்தத் தவறினால் பின்பற்றப்படும் பிற நிபந்தனைகள் போன்றவை அடங்கும்.
குறைந்தபட்ச மாத பேமெண்ட் செலுத்துவதற்காக நீங்கள் கடனின் கால அளவை நீட்டிக்க முயற்சி செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்வது முற்றிலும் தவறு. இதன் மூலமாக நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இதையும் படிக்க:
ரூ.50,000 இலவசமாக உங்கள் கணக்கிற்கு வரும்… PF இருப்பவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!
ஒருவேளை நீங்கள் புதிதாக வாங்கும் மொபைல் போன் சேதமடைந்தாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ கூட, தொடர்ந்து நீங்கள் தான் EMI தொகையை செலுத்த வேண்டும். எனவே போன் வாங்கும்போது, இதுபோன்ற எதிர்பாராத விதமான செலவுகளை தவிர்ப்பதற்கு அதற்கான இன்சூரன்ஸ் எடுப்பதை பற்றி நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)