தமிழ்நாடு முழுவதும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் மின்சார கார்களுக்கான வாகனப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஆ.டி.ஓ அலுவலகங்களில் வாகனங்கள் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மின்சார வாகனங்கள் வரிச் சலுகையுடன் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை முதல் மின்சார வாகனங்கள் ரிஜிஸ்டர் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 3,000 கார்கள் வரை ரிஜிஸ்டர் செய்யப்படாததால் புதிய மின்சார கார்களை இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மின்சார கார்களுக்கான வாகனப் பதிவு நிறுத்தப்பட்டது ஏன் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவராத நிலையில், இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:
நாளை கேரளாவில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – தமிழகத்திற்கு மழை எப்படி இருக்கும்?
எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய வேண்டாம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
