நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்ததால் விலை குறைக்கப்பட்டதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.40 ஆக இருந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மாலை திடீரென 20 காசுகள் குறைத்து ரூ.05.20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை 20 சதவிகிதம் உற்பத்தி குறைந்ததால் படிப்படியாக முட்டை விலை உயர்ந்து ரூ.5.80 ஆக இருந்தன.
இந்த நிலையில் சில நாட்களாக மழை பெய்ததால் முட்டை உற்பத்தி 10 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது, மேலும் பிற மண்டலங்களிலும் முட்டை விலை கணிசமான குறைக்கப்பட்டுள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் மட்டும் கடந்த 3 நாட்களில் மட்டும் 60 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் முட்டை விலை குறைய வாய்ப்பு இருப்பதாக முட்டை விலை குறித்து நாமக்கல் கோழிப் பண்ணையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
