Last Updated:
Egg Price | முட்டை உற்பத்தி அதிகரிப்பு, வடமாநிலங்களுக்கு செல்லும் ஏற்றுமதி குறைவு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை மேலும் 30 காசுகள் குறைந்து 5 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாவதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, கடந்த மாதம் பண்ணைக் கொள்முதல் விலை 6 ரூபாய் 40 காசுகளாக விற்பனையானது. கடந்த 15 நாட்களில் படிப்படியாக குறைந்து 5 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையானது. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதி முட்டை விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், முட்டை உற்பத்தி அதிகரிப்பு, வடமாநிலங்களுக்கு செல்லும் ஏற்றுமதி குறைவு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை மேலும் 30 காசுகள் குறைந்து 5 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாவதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.


