ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நீங்கள் வெளிநாட்டுப் படிப்பைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், வெளிநாட்டுப் படிப்புக்கு பல வங்கிகள் குறைந்த வட்டியில் கல்விக் கடன்களை வழங்குகின்றன. இந்த கடன்கள் பொதுவாக கல்விக் கட்டணம், லிவ்விங் காஸ்ட் மற்றும் லேப்டாப்கள், புத்தகங்கள், பயண டிக்கெட்டுகள் போன்ற இதர செலவுகளை உள்ளடக்கியது. இருப்பினும், இதற்கு நிறைய நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்தால் எளிதாக கல்விக் கடன் பெறலாம்.
Bankbazaar.comன் டேட்டாக்களின்படி, குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக் கடன்களை வழங்கும் 10 வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம். அதாவது, 7 ஆண்டுகள் கால வரம்பில் ரூ.50 லட்சம் கடன் வாங்கினால் சொத்துக்களின் அடிப்படையில் 8.60 சதவீதம் முதல் 13.70 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
இந்தியன் வங்கி:
இந்தியன் வங்கி 8.60 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தில் கல்விக்கடனை வழங்குகிறது. இந்த வங்கியில் 7 வருட கால அவகாசத்துடன் கூடிய ரூ.50 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ரூ.79,434ஆக இருக்கும்.
ஐசிஐசிஐ வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா:
இந்த இரண்டு வங்கிகளும் 9.25 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த வங்கிகளில் 7 வருட கால அவகாசத்துடன் கூடிய ரூ.50 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ரூ.81,081ஆக இருக்கும்.
பேங்க் ஆஃப் பரோடா:
பேங்க் ஆஃப் பரோடா வங்கி 9.45 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வங்கிகளில் 7 வருட கால அவகாசத்துடன் கூடிய ரூ.50 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ரூ.81,592ஆக இருக்கும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி:
பஞ்சாப் நேஷனல் வங்கி 10 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வங்கிகளில் 7 வருட கால அவகாசத்துடன் கூடிய ரூ.50 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ரூ.83,006ஆக இருக்கும்.
இதையும் படிக்க: Gold Rate : 1964 முதல் 2025 வரை.. ஆண்டுதோறும் உயர்ந்த தங்கத்தின் விலை விபரம் இதோ..
பாரத ஸ்டேட் வங்கி:
பாரத ஸ்டேட் வங்கி 10.15 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வங்கிகளில் 7 வருட கால அவகாசத்துடன் கூடிய ரூ.50 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ரூ.83,394ஆக இருக்கும்.
கனரா வங்கி:
கனரா வங்கி 10.25 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வங்கிகளில் 7 வருட கால அவகாசத்துடன் கூடிய ரூ.50 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ரூ.83,653ஆக இருக்கும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 11 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வங்கிகளில் 7 வருட கால அவகாசத்துடன் கூடிய ரூ.50 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ரூ.85,612ஆக இருக்கும்.
இதையும் படிக்க: 8th Pay Commission | 8வது சம்பள கமிஷன்.. ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. என்ன தெரியுமா?
பேங்க் ஆஃப் இந்தியா:
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 11.60 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வங்கிகளில் 7 வருட கால அவகாசத்துடன் கூடிய ரூ.50 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ரூ.87,198ஆக இருக்கும்.
ஆக்சிஸ் வங்கி:
ஆக்சிஸ் வங்கி 13.70 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வங்கிகளில் 7 வருட கால அவகாசத்துடன் கூடிய ரூ.50 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ரூ.92,873ஆக இருக்கும்.
March 18, 2025 4:08 PM IST
Educational loan | வெளிநாட்டில் படிப்பதற்கான கல்விக் கடன்கள்… குறைவான வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகள்…!

