எனினும் மிகவும் பிரபலமான கல்லூரியில் கல்வி கற்பது என்பது அதிக கல்வி கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் பிற இதர செலவுகள் உட்பட ஏராளமான செலவுகளுக்கு காரணமாகிறது. இப்போதெல்லாம், நல்ல கல்வி பெறத் தேவையான கட்டணம் பல லட்சங்களாகவும், சில கல்லூரிகள் மற்றும் துறைகளில், 1 கோடிக்கும் அதிகமாகவும் இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. தரமான கல்வியை தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்க திடீரென அதிக பணம் தேவைப்படுவதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் கனவை நிறைவேற்ற, சிறந்த கல்வியை வழங்க கல்வி கடன்களை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதன் பொருட்டு பல தனியார் மற்றும் பொதுத்துறை கடன் வழங்குநர்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் சேர்ந்து, கல்வி மற்றும் படிப்பு சார்ந்த நோக்கங்களுக்கான பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கல்வி கடன்களை வழங்குகிறார்கள். பிற கடன்களை போலில்லாமல் கல்வி கடன்கள் குறிப்பிட்ட மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் திருப்பி செலுத்தும் நெகிழ்வுத்தன்மையுடன் வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் படித்து முடித்துவிட்டு நல்ல வேலையில் சேர்ந்தவுடன் கடன் தொகையை திருப்பிச் செலுத்த துவங்கினால் போதுமானது.
மத்திய அரசு “PM Vidyalaxmi” என்ற திட்டத்தின் மூலம் தகுதியான மாணவர்களுக்கு நிதி உதவி செய்கிறது. இந்தத் திட்டம், நாட்டின் சிறந்த 860 தரமான உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs – quality Higher Educational Institutions) அட்மிஷன் பெறும் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு, பிணையம் மற்றும் உத்தரவாதம் தேவை இல்லாத கல்விக் கடன்களை வழங்கும் ஒரு அரசு திட்டமாகும். வட்டிக்கான மானிய சலுகைகள் குடும்ப ஆண்டு வருமானத்துடன் தொடர்புடையவை. எப்படி என்றால் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள மாணவர்களுக்கு, ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு வட்டியில் 3% மானியமும் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் அனைத்து ஷெட்யூல்ட் வங்கிகள்/பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs)/கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். எனினும் இந்த வங்கிகள் அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் வட்டி விகிதங்களை வசூலிக்கின்றன. கல்விக் கடன் வாங்கும் முன் வட்டி விகிதங்களைச் சரிபார்ப்பது, கிடைக்க கூடிய சிறந்த சலுகையை பெற முக்கியம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – ஆண்டுக்கு 7.15% முதல் 10.15% வரை
ஹெச்டிஎஃப்சி வங்கி – ஆண்டுக்கு 10.50%
ஐசிஐசிஐ வங்கி – ஆண்டுக்கு 9.00% முதல் 10.25% வரை
பஞ்சாப் நேஷ்னல் வங்கி – ஆண்டுக்கு 8.55%
பேங்க் ஆஃப் பரோடா – ஆண்டுக்கு 7.10% முதல் 9.95% வரை
கனரா வங்கி – ஆண்டுக்கு 7.10% முதல் 10.35% வரை
கல்விக் கடனுக்கான வரிச் சலுகை:
செக்ஷன் 80E-ஆனது மாணவர் கடனுக்கு செலுத்தும் வட்டியைக் கழிக்க கடன் வாங்குபவர்களை அனுமதிக்கும். இந்த பலன் தனிப்பட்ட கடன் வாங்குபவர்களுக்கும் மற்றும் உயர் கல்விக்கு மட்டுமே கிடைக்கும்.
November 07, 2025 7:50 AM IST

