• Login
Wednesday, September 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

E20 பெட்ரோல் வந்த நேரம்.. பெட்ரோல் வாகனங்களுக்கு குட்பை சொல்லும் இந்தியர்கள்..!! | Alternative Fuels Beat Petrol in India: CNG, EV & Hybrid Cars Overtake Petrol for First Time in August 2026

GenevaTimes by GenevaTimes
September 9, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
E20 பெட்ரோல் வந்த நேரம்.. பெட்ரோல் வாகனங்களுக்கு குட்பை சொல்லும் இந்தியர்கள்..!! | Alternative Fuels Beat Petrol in India: CNG, EV & Hybrid Cars Overtake Petrol for First Time in August 2026
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


E20 பெட்ரோல் வந்த நேரம்.. பெட்ரோல் வாகனங்களுக்கு குட்பை சொல்லும் இந்தியர்கள்..!!

இந்திய வாகன விற்பனை சந்தையில் கடந்த மாதம் மிகப்பெரிய ஒரு மாற்றம் நடந்துள்ளது. பொதுவாகவே இந்தியாவில் பெட்ரோலில் இயங்கும் கார்களுக்கு தான் டிமாண்ட் அதிகம். என்னதான் மின்சார கார்கள் , கேஸில் ஓடும் ஹைபிரிட் கார்கள் வந்தாலும் இந்தியர்களின் முதல் சாய்ஸாக இருந்தது பெட்ரோல் கார்கள் தான். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது.

இந்தியாவில் வாகனங்களின் சில்லரை விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 17.51 சதவீதம் அதிகரித்தது. இந்த மாதத்தில் மட்டும் 24.23 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்திய வாகன விற்பனை வரலாற்றில் முதல்முறையாக, பெட்ரோல் வாகனங்களை பின்னுக்கு தள்ளி, மாற்று எரிபொருளில் இயங்கும் பயணியர் வாகனங்களின் விற்பனை, புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது.

E20 பெட்ரோல் வந்த நேரம்.. பெட்ரோல் வாகனங்களுக்கு குட்பை சொல்லும் இந்தியர்கள்..!!

மொத்த வாகன விற்பனை அளவில் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் பங்கு 40.85 சதவீதமாகவும், மாற்று எரிபொருள் வாகனங்களின் பங்கு 41.95 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது. வாகன வினியோகஸ்தர் சங்கம் வெளியிட்ட தரவுகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த 41.95 சதவீதத்தில் 25.28 சதவீதம் சிஎன்ஜி/எல்பிஜி வாகனங்கள், 9.04 சதவீதம் ஹைபிரிட் வாகனங்கள், 7.63 சதவீதம் எலக்ட்ரிக் வாகனங்கள், 17.21 சதவீதம் டீசல் வாகனங்கள் ஆகும்.

அந்த வகையில் இந்தியர்கள் படிப்படியாக பெட்ரோல் வாகனங்களுக்கு குட்பை சொல்லி மற்ற வகை வாகனங்களுக்கு மாறி வருவது உறுதியாகியுள்ளது. E20 எனப்படும் எத்தனால் பெட்ரோல் பயன்பாட்டுக்கு மாறுவது தொடர்பாக மக்களிடையே இருக்கும் கவலைகள் மற்றும் செலவு குறைவு ஆகிய இரண்டு காரணங்களே பெட்ரோல் வாகன விற்பனை குறைந்து மற்ற வகை வாகனங்களின் விற்பனை அதிகரிக்க காரணம் என வாகன வினியோகஸ்தர் சங்கம் கூறுகிறது.

குறிப்பாக சிஎன்ஜி வாகனங்கள் பெட்ரோல் வாகனங்களுக்கு மிகப்பெரிய மாற்றாக உருவெடுத்துள்ளது. பெட்ரோலை விட சிஎன்ஜி வாகனங்களுக்கு செலவு குறைவு என்பது முக்கிய காரணம். இதனால் சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது, அதே நேரத்தில் மின்சார வாகன விற்பனையும் உயர்ந்திருக்கிறது.

சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்கள் விற்பனையில் 71% பங்குடன் மாருதி சுசுகி முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதாவது மின்சார கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 43% பங்குடன் முன்னிலை வகிக்கிறது. இந்தியா பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையில் பெட்ரோல் வாகனங்களுக்கு வரவேற்பு குறைவது ஒரு வகையில் நல்ல செய்தி.

கார் மட்டுமில்லாம்ல இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை, மின்சார வாகனங்களின் பயன்பாடு ஓராண்டுக்கு முன்பு 7.7% ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 10.7% ஆக உயர்ந்துள்ளதாம். ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு 65.3% ஆக இருந்தது; இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 56.6% ஆக மட்டுமே இருந்தது.

வணிக வாகனங்களை பொறுத்தவரை, மிக குறைந்த அளவிலிருந்த மின்சார வாகனங்களின் பயன்பாடு 2.1 சதவீதத்தில் இருந்து, இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து 5.2 சதவீதம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதை உணர்த்துகிறது.இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்புகள் இன்னும் மேம்படுத்தப்பட்டால் எலக்ட்ரிக் வாகன விற்பனை இன்னும் அதிகரிக்கும்.

Share This Article

English summary

Alternative Fuels Beat Petrol in India: CNG, EV & Hybrid Cars Overtake Petrol for First Time in August 2026

E20 பெட்ரோல் வந்த நேரம்.. பெட்ரோல் வாகனங்களுக்கு குட்பை சொல்லும் இந்தியர்கள்..!! / India’s car market hit a historic milestone in August 2026 as CNG, hybrid and electric vehicles together outsold petrol for the first time, capturing 41.95% of passenger vehicle retail sales versus 40.85% for petrol, according to FADA.

Story first published: Tuesday, September 8, 2026, 9:36 [IST]

Other articles published on Sep 8, 2026

Read More

Previous Post

’கிளிநொச்சி மைதானம் விரைவில் பூர்த்தி செய்யப்படும்’

Next Post

பினாங்கில் நடந்த வாகனம் மோதி நிற்காமல் சென்ற விபத்தில் வயதான பெண் உயிரிழந்தார் – Malaysiakini

Next Post

பினாங்கில் நடந்த வாகனம் மோதி நிற்காமல் சென்ற விபத்தில் வயதான பெண் உயிரிழந்தார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin