Last Updated:
ஈரானுடன் அமெரிக்கா மோதலில் ஈடுபட்டிருப்பதற்கு 60 சதவீத அமெரிக்கர்கள் எதிராக இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் தெரியுமா?
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில் உலகெங்கிலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலும் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், பெட்ரோல். டீசல் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அமெரிக்காவில் ஒரு தொண்டு நிறுவனம், சிகாகோ நகரில் 35 டாலர் அதாவது சுமார் 3,500 ரூபாய் அளவிற்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என அறிவித்தது. அதனால், அதிகாலை முதலே அங்குள்ள பெட்ரோல் நிலையங்களில் கார்கள் வரிசைகட்டின.
பெட்ரோல் விலை உயர்வு
சிலர் அதிகாலை 3 மணிக்கே வந்து பெட்ரோல் நிலையத்தில் காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்ததால் கடுப்பாகிப் போன ஓட்டுநர்கள், டிரம்பை கடுமையாக சாடினர். விலைவாசியை குறைக்க வேண்டிய டிரம்ப், விலைவாசி உயர்வுக்குக் காரணமாக மாறிவிட்டார் என கோபம் கொப்பளிக்க கூறுகின்றனர். ஈரானுடன் அமெரிக்கா மோதலில் ஈடுபட்டிருப்பதற்கு 60 சதவீத அமெரிக்கர்கள் எதிராக இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.


