அதையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசிய ட்ரம்ப், “அந்த சமயத்தில் கடவுள் என் பக்கம் இருந்தார். அன்று அந்த நொடியில் தலையை நான் திருப்பாமல் இருந்திருந்தால், இப்போது உங்கள் முன் இருந்திருக்கமாட்டேன். மேலும், அப்போது எனக்கு எதுவும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறேன் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கவே என் வலதுகையை உயர்த்திக் காட்டினேன். நீங்கள் காட்டிய அன்புக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த சம்பவம் பற்றி பலரும் என்ன நடந்தது… என்ன நடந்தது…. தயவுசெய்து சொல்லுங்கள் என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். இனி இரண்டாவது முறையாக நீங்கள் அதை என்னிடம் கேட்க மாட்டீர்கள். ஏனெனில் இது உண்மையில் சொல்வது மிகவும் வேதனையானது” என்றார் கூறினார்.

&w=1200&resize=1200,675&ssl=1)