டிரம்ப்பின் இந்த போர் நிறுத்த முடிவு, அவருக்கு ஒருவகையில் சாதகமாக அமைந்துள்ளது. அது என்னவெனில், ஒருவேளை டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் அது மிக மோசமான போர் நடவடிக்கையாக, இன அழிப்பாக அது இருந்திருக்கும். இது அவருடைய அதிபர் பதவியையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதாக இருந்திருக்கலாம். ஆம், அமெரிக்க சட்டத்தின் 25-வது சட்டத்திருத்தம் அதற்கு வழிவகுக்கிறது. மேலும் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல், ‘ஒருகாலத்தில் உலகளவில் நிலைத்தன்மைக்கான சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அமெரிக்கா, இப்போது சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது’ என்ற விமர்சனத்தை டிரம்ப் மீது வைத்திருக்கும். தன் மீதான இத்தகைய விமர்சனங்களில் இருந்து தப்பிக்கவே, மிக உயரிய விலையான ‘தற்காலிக’ போர் நிறுத்த அறிவிப்பை டிரம்ப் எடுத்ததாக சொல்லப்படுகிறது.


