இதன் காரணமாக, அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு முடிவுக்கு சொந்த நாட்டிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இந்தியா மீதான 50 சதவீத வரியை ரத்து செய்யக்கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் டெபோரா ராஸ், மார்க் வீசே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.


