இந்நிலையில், பர்கினோ ஃபாஸோ, மாலி, நைஜர், தெற்கு சூடான், சிரியா ஆகிய ஐந்து நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்துள்ளார். ஏற்கெனவே ஆப்கானிஸ்தான், ஈரான், சோமாலியா, ஹைதி உள்ளிட்ட 12 நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்தப் பட்டியல் 17 ஆக அதிகரித்துள்ளது.


