Last Updated:
சேலம் மாநகராட்சி திடலில் ஒரே இடத்தில் 42 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் வருடா வருடம் அமைக்கப்படுகின்றன. இதற்காக கடந்த மாதம் முதலே தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விற்பனையாளர்கள் உரிமம் பெற்றிருந்தனர். எனவே தற்போது 42 தற்காலிக பொட்டாசு கடைகள் சேலம் மாநகராட்சி திடலில் அமைக்கப்பட்டு இருக்கின்றது. ஒரே இடத்தில் அனைத்து வகையான பட்டாசுகளும் கிடைப்பதால் மக்களும் மகிழ்ச்சியுடன் சிரமமின்றி வாங்கி செல்கின்றனர்.
மாநகராட்சி தேர்தலில் அமைக்கப்பட்டு இருக்கும் பட்டாசு கடைகளுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு டன் வரையிலான பட்டாசுகளை மட்டுமே வைத்திருக்க அனுமதி. முக்கியமாக, தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது இது போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் பொதுமக்களை கவரக்கூடிய வகையில் புதுவித ரகரகமான பட்டாசுகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.
விலையும் கடந்த ஆண்டை விட 5% விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு விரும்பிய பட்டாசு வெடிகளை வாங்கி செல்கின்றனர். சேலம் மாநகராட்சி திடலில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக பட்டாசு கடைகள் அக்டோபர் 22ஆம் தேதி வரை செயல்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Salem,Salem,Tamil Nadu
October 20, 2025 3:08 PM IST
மாநகராட்சி திடலில் தற்காலிக 42 பட்டாசு கடைகள்… மொத்தமாக பட்டாசுகளை வாங்கிச் செல்லும் மக்கள்..!

