• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

DGMO: இராணுவத்தில் டிஜிஎம்ஓ என்றால் யார்? அவரின் பங்கு என்ன?

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
DGMO: இராணுவத்தில் டிஜிஎம்ஓ என்றால் யார்? அவரின் பங்கு என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முப்படை தளபதிகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்த இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல் (டிஜிஎம்ஓ) யார். டிஜிஎம்ஓவின் நடவடிக்கை ராணுவத்தில் என்ன?

இராணுவ திட்டமிடல் மற்றும் எல்லை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல். இந்தியாவில், இந்தப் பதவி பொதுவாக ஒரு லெப்டினன்ட் ஜெனரலால் வகிக்கப்படுகிறது. தற்போதைய இந்திய DGMO லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய். அதே நேரத்தில் பாகிஸ்தானின் DGMO மேஜர் ஜெனரல் காஷிஃப் அப்துல்லா ஆவார்.

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இவரது அறிவிப்புக்கு முன் இந்த நடவடிக்கையை எடுத்ததில் முக்கிய பங்கு டிஜிஎம்ஓவுக்கு இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் இரு நாட்டு டிஜிஎம்ஓக்களும் தொலைப்பேசியில் பேசி இந்த முடிவை எடுத்தன்பின்னே அறிவிப்பு வெளியானது.

பாகிஸ்தான் டிஜிஎம்ஓ இந்திய நேரப்படி பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய டிஜிஎம்ஓவைத் தொடர்பு கொண்டு பேசினார். அதே நாளில் மாலை 5:00 மணிக்கு இருநாட்டினரும் அனைத்துவித ராணுவ நடவடிக்கையையும் நிறுத்த ஒப்புக்கொண்டு அமல்படுத்தினர். ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில், நாளை (மே12ஆம் தேதி) இந்தியாவின் டிஜிஎம்ஓவும், பாகிஸ்தான் டிஜிஎம்ஓவும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்தியாவில் டிஜிஎம்ஓ செயல்பாடு:

போர் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உட்பட இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவது, மேற்பார்வையிடுவது உள்ளிட்ட பணிகளை டிஜிஎம்ஓ மேற்கொள்வார். அதிலும், ஆயுதப்படைகள் எந்தவொரு நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்வது அவரது பணியின் முக்கிய பகுதியாக இருக்கிறது.

டிஜிஎம்ஓ இராணுவத்தின் பிற பிரிவுகளுடனும், பல்வேறு அமைச்சகங்களுடம் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவார். டிஜிஎம்ஓ வாரத்திற்கு ஒரு முறை பாகிஸ்தான் டிஜிஎம்ஓவுடன் பேசுவார். இது எல்லையில் பதட்டங்களை குறைக்கவும், குறிப்பாக தற்போது போன்ற பதட்டமான சூழலை குறைக்கவும் உதவும். மேலும், டிஜிஎம்ஓ தொடர்ந்து ராணுவ தளபதிக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கும் தனது பணி குறித்து தெரிவிப்பார்.

நெருக்கடிகளின் போது டிஜிஎம்ஓ ஏன் முக்கியம்?

பதட்டங்கள் அதிகரிக்கும் போது டிஜிஎம்ஓதான் பெரும்பாலும் எதிர்நாட்டுடன் முதல் தொடர்பு புள்ளியாக இருப்பார். இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, டிஜிஎம்ஓக்கள் தொடர்பு இருந்துவருகிறது. இப்படி இருவரும் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம், தவறான புரிதல்களைத் தடுக்கவும் எல்லையில் மோதலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

டிஜிஎம்ஓ விரைவான முடிவுகளை எடுப்பதற்கும், நிகழ்நேரத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், துருப்புக்களின் இயக்கம் அல்லது போர் நிறுத்த மீறல்கள் போன்ற தொழில்நுட்ப இராணுவப் பிரச்சினைகளைக் கையாளுவதற்கும் நம்பகமானவராக செயல்படுவார்.

Read More

Previous Post

கள்ளக்காதலி தாக்கியதில் ஒருவர் மரணம்

Next Post

எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த ஐபிஎல் ஆணையம் தீவிரம்: மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும் பிசிசிஐ | iPL Commission keen to hold remaining matches BCCI awaiting central government decision

Next Post
எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த ஐபிஎல் ஆணையம் தீவிரம்: மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும் பிசிசிஐ | iPL Commission keen to hold remaining matches BCCI awaiting central government decision

எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த ஐபிஎல் ஆணையம் தீவிரம்: மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும் பிசிசிஐ | iPL Commission keen to hold remaining matches BCCI awaiting central government decision

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin