Last Updated:
Delhi Red Fort Blast | டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் சிகிச்சைப்பலனின்றி இறந்தனர்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையம் முன்பு கார் ஒன்று நேற்று மாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன.
இந்த வெடி விபத்தில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் சிகிச்சைப்பலனின்றி இறந்தனர்.
இதனால், டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள், தேசிய புலனாய்வு முகமையினர், தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Delhi,Delhi,Delhi
November 11, 2025 1:12 PM IST


