கார் குண்டு வெடிப்பு சம்பவத்தால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அருகில் உள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் வெடித்து சிதறின. இதனிடையே, டெல்லியில் கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை சீல் செய்து, காவல் துறை, என்.ஐ.ஏ., தேசிய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.


