
Last Updated:
Delhi Elections 2025: மக்களின் பணம் பணக்கார நண்பர்களுக்குச் செல்வதுதான் பாஜகவின் மாடல் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து நலத்திட்டங்களும் நிறுத்தப்பட்டுவிடும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்கள் முன்பு 2 மாடல்கள் தற்போது உள்ளன எனத் தெரிவித்தார்.
ஒன்று மக்களின் பணம் மக்களுக்கே செல்லும் கெஜ்ரிவால் மாடல் என்றும் மற்றொன்று, மக்களின் பணம் தங்களது பணக்கார நண்பர்களுக்குச் செல்லும் வகையிலான பாஜக மாடல் எனவும் விமர்சித்தார். இதில் எந்த மாடல் வேண்டுமென்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமெனவும் கூறினார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து நலத்திட்டங்களும் நிறுத்தப்பட்டுவிடும் என்றும் ஏனென்றால், அந்த திட்டங்கள் அனைத்தும் பாஜவுக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மக்களின் பணம் பணக்கார நண்பர்களுக்குச் செல்வதுதான் பாஜகவின் மாடல் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
Delhi Cantonment,New Delhi,Delhi
January 27, 2025 11:15 AM IST
Delhi Elections 2025: பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து நலத்திட்டங்களும் நிறுத்தப்பட்டுவிடும் : டெல்லி முதல்வர் எச்சரிக்கை

