Last Updated:
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவிய டெல்லியில் இன்று பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. அன்றைய தினம் மும்முனை போட்டியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சி எது என்பது தெரிந்துவிடும்.
இந்நிலையில், இன்று டெல்லியில் 70 சட்டமன்றத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. ஆட்சி அமைக்க டெல்லியில் 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இதில் மாலை 5 மணி வரை டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 தொகுதிகளில் மொத்தம் 57.70% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு 62% வரை வாக்குப்பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வரும் 8-ம் தேதி முடிவுகள் வரவிருந்தாலும், இன்று வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
சி.என்.என்.:
ஆம் ஆத்மி: 26
பாஜக : 44
காங்கிரஸ் 0
மற்றவை: 0
ரிபப்ளிக்:
ஆம் ஆத்மி: 32 – 37
பாஜக: 35 – 40
காங்கிரஸ்: 0-1
மற்றவை: 0
டைம்ஸ் நவ்:
ஆம் ஆத்மி: 32 – 37
பாஜக: 37 – 43
காங்கிரஸ்: 0-2
மற்றவை: 0
என்.டி.டி.வி:
ஆம் ஆத்மி: 32 – 37
பாஜக: 35 – 40
காங்கிரஸ்: 0-2
மற்றவை: 0
பி-மார்க்:
ஆம் ஆத்மி: 21-31
பாஜக : 39 – 49
காங்கிரஸ் 0-1
மற்றவை: 0
மேட்ரிஸ்:
ஆம் ஆத்மி: 32-37
பாஜக : 35 – 40
காங்கிரஸ் 0-1
மற்றவை: 0
February 05, 2025 6:44 PM IST


