முஜாமில், ஆதில், உமர், ஷாகீன் ஆகியோர் இணைந்து 20 லட்சம் ரூபாய் நிதி திரட்டியதாகவும், வெடி பொருட்கள் தயாரிக்க நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய உரங்களை 3 லட்சம் ரூபாய்க்கு குருகிராம் சுற்றுவட்டாரத்தில் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இதில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக உமர் மற்றும் முஜாமில் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், “சிக்னல்” என்ற தகவல் பரிமாற்ற செயலியில் 4 நபர்களை உள் அடக்கி குழு ஒன்றை உமர் உருவாக்கியதும் தெரியவந்துள்ளது.


