Last Updated:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தச் செல்லும் இளைஞர்களுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் குரல் கொடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “நாம் மீண்டும் ஒரு அவசரநிலைக் காலத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் உரிமை நம் இளைஞர்களுக்கு இல்லையா? நமது ஜனநாயகத்தைக் காக்கக் குரல் எழுப்பத் துணிந்துள்ள இந்தியாவின் துணிச்சலான மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் நாட்டின் தலைநகருக்குப் போராட்டம் நடத்தச் செல்லும் இளைஞர்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
முதலில், டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. இரண்டாவதாக, டெல்லிக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாக, 24 மணி நேரத்திற்கு இணையச் சேவைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாடு முழுவதும் மாணவர் ஆர்வலர்கள், இளைஞர் தலைவர்கள் மற்றும் அரசியல் அமைப்பாளர்கள் பெருமளவில் தடுத்து வைக்கப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன.
I strongly condemn the Union Government’s steps to restrict the movement of young people who are heading to the nation’s capital to stage a protest against the electoral irregularities and to demand the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar.
First, metro stations in Delhi were shut down. Second, trains to Delhi were cancelled. Finally, internet restrictions were imposed for 24 hours.Widespread detentions of student activists, youth leaders, and political organizers are being reported nationwide.
Are we living in another era of Emergency?
Do our youth not have the right to raise their voices against electoral irregularities?
We stand in solidarity with India’s brave students and youth who are determined to raise their voices to save our democracy.
I urge the Union Government to listen to the voices of the nation’s youth instead of attempting to silence them through intimidation and police brutality.
#DelhiProtest #Gyaneshkumar
— Udhay (@Udhaystalin) October 9, 2026
நாம் மீண்டும் ஒரு அவசரநிலைக் காலத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் உரிமை நம் இளைஞர்களுக்கு இல்லையா? நமது ஜனநாயகத்தைக் காக்கக் குரல் எழுப்பத் துணிந்துள்ள இந்தியாவின் துணிச்சலான மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்.
அச்சுறுத்தல் மற்றும் காவல்துறை அடக்குமுறை மூலம் இளைஞர்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, அவர்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


