இருப்பினும், டெல் அவிவ் போன்ற நகரங்களில் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர். ஹூதிகள் போரில் இணைந்துள்ளதால், செங்கடல் வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மீண்டும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கெனவே ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், ஹூதிகள் பாப்-எல்-மண்டேப் (Bab al-Mandab) நீரிணையைத் தாக்கினால், உலகளாவிய எரிபொருள் மற்றும் சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.
ஹூதி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரீ
அமெரிக்கா தனது யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (USS Gerald R. Ford) போன்ற போர்க்கப்பல்களை இப்பகுதிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம். ஏமனின் ஹூதி கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து , குறிப்பாக சனா மற்றும் ஹொடைடா இஸ்ரேலின் தெற்குப் பகுதியான ஈலாட் (Eilat) வரையிலான வான்வழித் தூரம் சுமார் 1,700 முதல் 1,900 கிலோமீட்டர்கள் ஆகும்.
டெல் அவிவ் (Tel Aviv) போன்ற மத்திய இஸ்ரேல் பகுதிகளை அடைய ஏவுகணைகள் சுமார் 2,100 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். இது ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதலுக்கு இணையான தூரம் என்பதால், ஹூதிகள் ஈரானின் தொழில்நுட்ப உதவியை முழுமையாகச் சார்ந்துள்ளனர். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஹூதிகள் Palestine-2 என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் வேகம் ஒலியை விட 9 மடங்கு அதிகம் என்றும், வெறும் 11 நிமிடங்களில் இஸ்ரேலை அடையக்கூடியது என்றும் ஹூதிகள் உரிமை கோருகின்றனர்.
தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே, இஸ்ரேலிய விமானப்படை ஏமனில் உள்ள ஹூதி இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏமன் தலைநகர் சனாவிற்கு (Sanaa) அருகிலுள்ள ஹூதிகளின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் ஏவுகணை ஏவுதளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஹூதிகளின் ஆயுத விநியோகப் பாதையைத் துண்டிக்கும் முயற்சியாக முக்கியத் துறைமுகமான ஹொடைடாவிலும் (Hodeidah) தாக்குதல் நடத்தப்பட்டது. செங்கடல் பகுதியில் ஹூதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை உஷார் படுத்தியுள்ளது. ஏமனில், ஈரானுக்கு ஆதரவாக மாபெரும் பேரணியும் நடைபெற்றது.
ஹூதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் முதல்முறையாக இஸ்ரேல் மீது தாக்குதல்
சனாவின் வீதிகளில் லட்சக்கணக்கான ஹூதி ஆதரவாளர்கள் திரண்டனர்… அவர்கள் கைகளில் பாலஸ்தீனம், ஈரான் மற்றும் ஹூதி அமைப்பின் கொடிகளை ஏந்தியிருந்தனர். “அமெரிக்காவிற்கு மரணம்”, “இஸ்ரேலுக்கு மரணம்” போன்ற ஹூதிகளின் வழக்கமான முழக்கங்கள் பேரணி முழுவதும் எதிரொலித்தன. பேரணியின் ஒரு பகுதியாக, ஹூதி வீரர்கள் ராணுவ சீருடையில் ஆயுதங்களுடன் அணிவகுத்துச் சென்றனர். வாகனங்களில் பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணை மாதிரிகள் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டன.
போர் தொடங்கி ஒரு மாதம் முடிவடைந்த நிலையில், ஈரானிலும் அரசு ஆதரவு பேரணிகள் நடைபெற்றன. இஸ்ரேலிய ராணுவம் இன்று அதிகாலை ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரானிய ஆட்சியின் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவத் தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. போருஜேர்ட் (Borujerd) மற்றும் ஜஞ்சான் (Zanjan) போன்ற நகரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது விழுந்த குண்டுகளால் 12-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், SHOTS ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்களைத் துல்லியமாக நடத்த ரஷ்யா உதவி வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் ‘லியானா’ (Liana) உளவு செயற்கைக்கோள் அமைப்பு மூலம், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களின் இருப்பிடத் தகவல்களை ஈரான் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது ஈரானின் ‘துல்லியத் தாக்குதல்’ (Precision strike) திறனை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் ரேடார்களை முடக்குவதற்கும் இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படுவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். ரஷ்யாவின் லியானா (Liana) என்பது விண்வெளியில் இருந்து எதிரி நாடுகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் ஒரு நவீன உளவு செயற்கைக்கோள் கட்டமைப்பு அதாவது Spy Satellite Constellation.
Spy Satellite
லியானா திட்டம் இரண்டு வகையான செயற்கைக்கோள்களைக் கொண்டது. முதலாவது லோடோஸ்-எஸ் (Lotos-S).. இது ஒரு ‘பேசிவ்’ (Passive) உளவு செயற்கைக்கோள். அதாவது, இது எதையும் அனுப்பாது. மாறாக, பூமியில் இருந்து வரும் ரேடியோ சிக்னல்கள், தகவல் தொடர்புகள் மற்றும் ரேடார் சிக்னல்களை ரகசியமாக இடைமறித்து அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறியும். இரண்டாவது பியோன்-என்கேஎஸ் (Pion-NKS).. இது ஒரு ‘ஆக்டிவ்’ (Active) உளவு செயற்கைக்கோள். இதில் சக்திவாய்ந்த ரேடார் பொருத்தப்பட்டுள்ளது.. இது மேகமூட்டம் அல்லது இருட்டு என எந்த சூழலிலும் கடலில் உள்ள கப்பல்கள் மற்றும் தரையில் உள்ள வாகனங்களைத் துல்லியமாகப் படம் பிடிக்கும்.
வளைகுடா மற்றும் செங்கடல் பகுதியில் உள்ள அமெரிக்காவின் USS Abraham Lincoln போன்றவை விமானம் தாங்கிப் போர்க்கப்பல்கள் எங்கே இருக்கின்றன என்பதை லியானா மூலம் ஈரான் அறிந்து கொள்கிறது. இஸ்ரேலின் டிமோனா (Dimona) போன்ற ரகசிய அணுசக்தி மற்றும் ராணுவ மையங்களின் தற்போதைய நிலையை ரஷ்யா லியானா மூலம் ஈரானுக்குப் பகிர்ந்து வருவதாக ‘ஆபரேஷன் ஹிட்டன் ஹேண்ட்’ (Operation Hidden Hand) அறிக்கைகள் கூறுகின்றன.
ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் முந்தைய காலத்தை விட இப்போது அதிகத் துல்லியத்துடன் (Precision) இலக்குகளைத் தாக்குவதற்கு லியானா வழங்கும் இலக்குத் தரவுகளே (Targeting data) முக்கியக் காரணம். இந்த செயற்கைக்கோள்கள் சுமார் 900 கி.மீ உயரத்தில் சுற்றி வருகின்றன. இவை ஒரு சிறிய கார் அல்லது சிறிய படகைக் கூட விண்வெளியில் இருந்து அடையாளம் காணும் திறன் கொண்டவை. ரஷ்யாவின் இந்தத் தரவுப் பகிர்வு ஈரானுக்கு ஒரு ‘விண்வெளிக் கண்’ போலச் செயல்படுகிறது, இது அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்க ஈரானுக்கு உதவுகிறது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே கடந்த வாரம் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த உரையாடல் மிகவும் “கடுமையாகவும்” , சில இடங்களில் வாக்குவாதங்கள் நிறைந்ததாகவும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உரையாடலின் போது வான்ஸ், நெதன்யாகுவை கடுமையாகச் சாடியதாகக் கூறப்படுகிறது.
போர் தொடங்குவதற்கு முன்பு, ஈரானின் ஆட்சி மாற்றத்தை (Regime Change) மிக எளிதாகச் செய்துவிடலாம் என்று நெதன்யாகு அதிபர் டிரம்ப்பிடம் “மிகைப்படுத்தி” கூறியதாக வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். தொடக்கம் முதலே வான்ஸ் இந்தப் போரை விரும்பவில்லை என்றும், தொடர்ந்து நீட்டிக்க விரும்பவில்லை என்பதிலும் உறுதியாக உள்ளார். ஈரானுடன் ஒரு சுமுகமான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு போரை முடிவுக்குக் கொண்டு வர அவர் முன்னுரிமை அளித்து வருகிறார். “ஈரானியர்கள் வான்ஸுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், அவர்களுக்கு வேறு யாரிடமும் ஒப்பந்தம் கிடைக்காது” என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு வான்ஸ் தற்போது ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்காற்றுகிறார்.
வான்ஸை ஒரு “மென்மையான போக்கைக் கடைபிடிப்பவர்” என்று சித்தரிப்பதற்காக இஸ்ரேலியத் தரப்பு சில செய்திகளை ஊடகங்களில் கசியவிடுவதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் கருதுகின்றனர். இதை “ஜே.டி-க்கு எதிரான இஸ்ரேலிய ஆபரேஷன்”என்று கூட ஒரு சிலர் கூறுகின்றனர்.
நெதன்யாகு, ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ மையங்களை முழுமையாக அழிக்கும் வரை போரைத் தொடர விரும்புகிறார். போர் நீண்டு கொண்டே செல்வது அமெரிக்காவின் வளங்களை வீணடிக்கும் என்றும், டிரம்ப் கொடுத்த வாக்குறுதிப்படி விரைவாகப் போரை முடிக்க வேண்டும் என்றும் வான்ஸ் நினைக்கிறார். ஒட்டுமொத்தமாக அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் உத்திகளில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதையே இந்த உரையாடல் காட்டுகிறது…REMOVE))))
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாகப் போரில் இணைந்தது, இந்தப் போரை வெறும் ஈரான்-இஸ்ரேல் மோதலாக மட்டும் வைக்காமல், ஒரு ‘பிராந்தியப் பெருநெருப்பாக’ மாற்றியுள்ளது. ஹார்முஸ் நீரிணை ஏற்கனவே ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தற்போது பாப்-எல்-மண்டேப் நீரிணையையும் ஹூதிகள் அச்சுறுத்துவது, உலக வர்த்தகத்தின் கழுத்தை நெரிக்கும் ஒரு ‘Double Chokehold உத்தியாகவே பார்க்கப்படுகிறது.

