• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

DECODE | நெதன்யாகுவை பழிதீர்க்க காத்திருக்கும் இஸ்ரேல் மக்கள்? வரலாற்றை மாற்றப்போகிறதா இந்த தேர்தல்? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
DECODE | நெதன்யாகுவை பழிதீர்க்க காத்திருக்கும் இஸ்ரேல் மக்கள்? வரலாற்றை மாற்றப்போகிறதா இந்த தேர்தல்? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேலின் தேர்தல் முறை என்ன?

120 இடங்களை கொண்டுள்ள இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பெயர் நெசெட் (Knesset). நெசெட் (Knesset) என்றால் ஹீப்ரு மொழியில் கூட்டம் அல்லது சபை என பொருள். இஸ்ரேலின் நெசெட் (Knesset) ஒரே ஒரு அவையைக் கொண்ட Unicameral நாடாளுமன்றமாகும். அதாவது நாடு முழுவதும் ஒரே ஒரு தொகுதியாகக் கருதப்பட்டு தேர்தல் நடைபெறும்.

மக்கள் தாங்கள் விரும்பிய கட்சிகளுக்கு வாக்கு அளிப்பார்கள். கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்திற்கு ஏற்ப நாடாளுமன்ற இடங்கள் பிரித்தளிக்கப்படும். ஒரு கட்சி நாடாளுமன்றத்திற்குள் நுழைய குறைந்தபட்சம் 3.25% வாக்குகளைப் பெற வேண்டும். ஆட்சியைப் பிடிக்க 120 இடங்களில் குறைந்தபட்சம் 61 இடங்களை பெற வேண்டும். எந்தவொரு ஒற்றைக் கட்சிக்கும் 61 இடங்கள் கிடைக்காத பட்சத்தில், பல கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி  அமைக்கும்.

தேர்தலும் நெதன்யாகுவின் அரசியல் வாழ்வும்: 1988-க்குப் பிறகு, இடைக்காலத் தேர்தல் இன்றி 4 ஆண்டுகால முழு ஆயுட்காலத்தையும் நிறைவு செய்தது நெதன்யாகுவின் ஆட்சிதான். 2019 முதல் 2022- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 5 முறை அடுத்தடுத்துத் தேர்தல்கள் நடைபெற்றன. இஸ்ரேல் நாடாளுமன்றமான ‘நெசெட்டில்’ மொத்தம் 120 இடங்கள் இருக்கக் காரணம், கிமு 5-ஆம் நூற்றாண்டில் செயல்பட்ட Great Assembly-யில் சரியாக 120 தலைவர்கள் இருந்தனர். அதே தொன்மையான நினைவைப் போற்றும் வகையில் இந்த எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 2027-ம் ஆண்டிலும் கச்சா எண்ணெய் விலை குறையாது? வெளியான அதிர்ச்சி தகவல்!

1948-ல் இஸ்ரேல் உருவானதிலிருந்து இன்றுவரை நடைபெற்ற எந்தவொரு பொதுத்தேர்தலிலும், ஒரு கட்சி கூட 61 இடங்களைப் பெற்று தனித்துப் பெரும்பான்மை ஆட்சி அமைத்தது இல்லை. பெரும்பாலான நாடுகளில் மாநிலங்கள், மாவட்டங்கள் எனப் பல தொகுதிகள் பிரிக்கப்பட்டுத் தேர்தல் நடக்கும். ஆனால் இஸ்ரேல் முழுவதுமே ஒரே ஒரு பெரிய தொகுதிதான். மக்கள் வேட்பாளருக்கு வாக்களிப்பதில்லை; கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். இதனால், சிறிய கட்சிகளுக்கும் மக்கள் அளிக்கும் வாக்குகள் வீணாகாமல், விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

Israelis vote on Netanyahu’s future as October 7 attack looms over election

இஸ்ரேல் தேர்தல்

இந்த தேர்தலில் என்ன நடக்கும்? கருத்துக்கணிப்புக்கள் சொல்வது என்ன?: இத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வெற்றியடைந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில்  நெதன்யாகுவின் ‘லிகூட்’ (Likud) கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு 48 முதல் 50 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின்  கூட்டணிக்கு  54 முதல் 56 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு ஆதரவான Channel 14 தொலைக்காட்சி, நெதன்யாகுவின் கூட்டணி 62 இடங்கள் வரை பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என கூறுகிறது.

“யார் அடுத்த பிரதமராக வர வேண்டும்?” என்ற நேரடி விருப்பக் கணிப்பில், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்காட் (Gadi Eisenkot) மற்றும் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் (Naftali Bennett) ஆகிய இருவரையும் விட நெதன்யாகு பின்னடைவையே சந்தித்துள்ளார். நெதன்யாகு கூட்டணியில் உள்ள சில தீவிர வலதுசாரி மற்றும் மதவாதக் கட்சிகள் குறைந்தபட்ச வாக்கு வரம்பான 3.25%-ஐத் தாண்டத் தவறினால், அக்கட்சிகளின் வாக்குகள் வீணாகி நெதன்யாகுவின் வெற்றி வாய்ப்பை மேலும் பாதிக்கும்.

இதையும் படிங்க: அமெரிக்கா – ஈரான் போர்: 2027-லும் உலகை அச்சுறுத்தும் எரிசக்தி நெருக்கடி

இஸ்ரேல் தேர்தல் முறையில் இரண்டு தோழமைக் கட்சிகள் தங்களுக்குள் Surplus-Vote Agreement செய்துகொள்ளலாம். அதன்படி, தேர்தல் முடிவில் இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளுக்குப் பிறகு மீதமாகும் உபரி வாக்குகளை ஒன்று சேர்த்து, எந்தக் கட்சிக்கு கூடுதல் ஒரு நாடாளுமன்ற இடம் கிடைக்க வாய்ப்புள்ளதோ அக்கட்சிக்கு அந்த இடம் வழங்கப்படும். நெதன்யாகுவின்  லிகூட் (Likud) கட்சியும் தீவிர வலதுசாரிக் கூட்டணியும் இத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. 1,200-திற்கும் மேற்பட்டவர்களின்  உயிரை குடித்த அக்டோபர் 7 சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால்,  நெதன்யாகுவின் ஒட்டுமொத்த ஆட்சி மற்றும் பாதுகாப்பு தோல்விகள் மீதான மக்களின் தீர்ப்பாகக் கருதப்படுகிறது.

Israel Election 2026 LIVE Updates: Netanyahu's Fate On Line As Israel Votes For First Time Since Oct 7 Attack

நெதன்யாகு

நெருக்கடியில் நெதன்யாகு… காரணம் என்ன? இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளதாக துருக்கியும் சவுதி அரேபியாவும் நெதன்யாகுவிடம் எச்சரித்தாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இந்த எச்சரிக்கையை நெதன்யாகு பொருட்படுத்தவில்லை என்ற தகவலும் வெளியானது. தேர்தல் நேரத்தில் வெளியான இந்த தகவல்கள் நெதன்யாகுவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

அக்டோபர் 7 தாக்குதல் தொடர்பாக உளவுத் துறையின் தோல்விக்கு என்ன காரணம் என விசாரணை நடத்த State Commission of Inquiry அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நெதன்யாகு இன்று வரை எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இஸ்ரேலின் பிற ராணுவ மற்றும் உளவுத்துறைத் தலைவர்கள் இத்தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகியபோதிலும், நெதன்யாகு தனக்கு இதில் எந்தப் பங்கும்  இல்லை என்பது போல நடந்து கொள்வதும், மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசாவில் பிணை கைதிகளாக பிடிக்கப்பட்ட மக்களை மீட்க முறையான ஒப்பந்தம் செய்யாமல், ஹமாஸ் உடனான போரைத் தேவையின்றி நீட்டித்து மக்களை பதற்றத்தில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. நெதன்யாகு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள இடாமர் பென்-க்வீர் (Itamar Ben-Gvir) மற்றும் பெசலேல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) போன்ற தீவிர வலதுசாரி மற்றும் அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மதவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

அவதியில் இஸ்ரேல் மக்கள்… இந்த தலைவர்களின் பேச்சும் முடிவுகளும் நாட்டை உலக அரங்கில் தனிமைப்படுத்தி விட்டதாக மிதமான சிந்தனை கொண்ட இஸ்ரேலியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சாதாரண இஸ்ரேலிய குடும்பங்களின் இளைஞர்கள் கட்டாய ராணுவப் பயிற்சிக்குச் சென்று போர்க்களத்தில் உயிரைத் தியாகம் செய்யும்போது, நெதன்யாகுவுக்கு ஆதரவளிக்கும் தீவிர யூத மதவாதப் பிரிவினருக்கு (Haredi Ultra-Orthodox) மட்டும் ராணுவப் பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர் போர்ச் செலவினங்கள் காரணமாக, இஸ்ரேலில் அத்தியாவசியப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, எரிபொருள் கட்டணங்கள் பெருமளவில் உயர்ந்து நடுத்தர மக்களின் வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

Israel Election 2026: Key candidates, issues and why no party has ever won a majority

இஸ்ரேலில் வெடித்த போராட்டம்

போருக்காகப் பில்லியன் கணக்கான டாலர்களை ராணுவத்திற்குச் செலவழிக்கும் அதேவேளையில், தனது கூட்டணிக் கட்சிகளின் நலன்களுக்கு மட்டும் பட்ஜெட்டில் பெரும் நிதியை ஒதுக்குவது மக்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இஸ்ரேலின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய ஹைடெக் (High-Tech) துறை மற்றும் சிறு தொழில்கள் ஆள் பற்றாக்குறையாலும், முதலீட்டாளர்களின் பின்வாங்கலாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத் தடைகளைச் சமாளிக்க “சுயசார்பு நிலை”  எனக் கூறி நெதன்யாகு முன்வைக்கும் கருத்துக்கள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என்றும், அது இஸ்ரேலின் பொருளாதாரத்தையே முற்றிலுமாகச் சீர்குலைத்துவிடும் என்றும் பொருளாதார நிபுணர்களும் பொதுமக்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கோபத்தில் மக்கள்? தேர்தலில் பழிதீர்ப்பார்களா? நெதன்யாகு மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதிலிருந்து தப்பித்துக்கொள்ளவே, மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர துடிக்கிறார் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தல் நகர்வுகளும், இஸ்ரேலுக்கு வழங்கி வரும் கட்டுப்பாடற்ற ராணுவ உதவிகள் குறித்து அமெரிக்க மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தியும் நெதன்யாகுவுக்கு சர்வதேச அளவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்புடன் ஏற்பட்டுள்ள மோதலால் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் தேர்தலில் நெதன்யாகுவை பழி தீர்ப்பார்கள் என தேர்தல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். டெல் அவீவ் (Tel Aviv) நகரின் ‘கப்லான் (Kaplan) சந்திப்பில்’ வாரந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு, “ஜனநாயகம் வேண்டும்”, “நெதன்யாகு பதவி விலக வேண்டும்” என்று மக்கள் நடத்தும் போராட்டங்கள், இஸ்ரேலில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இஸ்ரேலிய வரலாற்றிலேயே முதல்முறையாக,’மொசாத்’ (Mossad) உளவு அமைப்பின் முன்னாள் தலைவர்கள், ஓய்வுபெற்ற ராணுவத் தளபதிகள் மற்றும் விமானப்படை விமானிகள் போன்றோர் கப்லான் வீதியில் திரண்டு அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் கலந்துகொண்டனர். போர் பதற்றம், பொருளாதார வீழ்ச்சி, சர்வதேச தனிமைப்படுத்தல் மற்றும் சொந்த நாட்டின் மக்களிடையே வெடித்துள்ள கடும் அதிருப்தி ஆகியவற்றிற்கு இடையே நடைபெறும் இந்த தேர்தல், பெஞ்சமின் நெதன்யாகுவின் 16 ஆண்டுகால அரசியல் வாழ்வை தீர்மானிக்கும் ஒரு மாபெரும் சோதனையாக மாறியுள்ளது.

Read More

Previous Post

Israel: பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்திற்கு வேட்டு.. ஈரான் மீதான போரில் அடுத்து நடக்கப்போவது என்ன..? | Is Netanyahu’s Rule Coming to an End? How Israel’s High-Stakes 2026 Election Will Reshape the Iran War

Next Post

பினாங்கில் உள்ள பெட்ரோல் நிலையம் மீது நிதி அமைச்சகம் நடவடிக்கை. – Malaysiakini

Next Post

பினாங்கில் உள்ள பெட்ரோல் நிலையம் மீது நிதி அமைச்சகம் நடவடிக்கை. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin