• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

DC vs LSG | 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி! @ ஐபிஎல் | Delhi Capitals beat Lucknow Super Giants by six wickets

GenevaTimes by GenevaTimes
April 12, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
DC vs LSG | 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி! @ ஐபிஎல் | Delhi Capitals beat Lucknow Super Giants by six wickets
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது. குயின்டன் டி காக் – கே.எல்.ராகுல் ஓப்பனர்களாக களமிறங்கினர். 3-வது ஓவரை வீசிய கலீல் அகமது பந்தில் குயின்டன் டி காக் 19 ரன்களில் எல்பிடபள்யூ ஆனார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 5வது ஓவரில் கலீல் அகமது வீசிய பந்தில் அதேபோல எல்பிடபள்யூ ஆனது ஆச்சரியம். 3 ரன்களில் கிளம்பினார்.

அவர்களைத் தொடர்ந்து களத்துக்கு வந்த மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ரன்களில் விக்கெட் ஆனதும், அதேஓவரில் அடுத்து நிக்கோலஸ் பூரன் டக்அவுட் ஆனதும் லக்னோ ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. போராடிக்கொண்டிருந்த கே.எல்.ராகுலும் 39 ரன்களில் அவுட்டாக 10 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்த லக்னோ 80 ரன்களை சேர்த்திருந்தது.

ஆயுஷ் பதோனி – தீபக் ஹூடா இணைந்து கள நிலவரத்தை மாற்றுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்க, தீபக் ஹூடா 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் ஆயுஷ் பதோனி பொறுப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக நிற்காமல் க்ருணால் பாண்டியா 3 ரன்களில் விக்கெட்டானார்.

அடுத்து வந்த அர்ஷத் கான் நிதானத்தை கடைப்பிடித்து துணை நிற்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 167 ரன்களைச் சேர்த்தது.

168 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், பிரித்வி ஷா – டேவிட் வார்னர் இருவரும் ஓப்பனிங் செய்தனர். யாஷ் தாக்குர் வீசிய பந்தில் போல்ட் ஆன வார்னர் எட்டு ரன்களுடன் வெளியேறவே, ஆறு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார் பிரித்வி ஷா.

அடுத்து இறங்கிய ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஐந்து சிக்ஸர்கள், 2 ஃபோர்கள் என 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். ரிஷப் பந்த் 41 ரன்கள், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 15 ரன்கள், ஷாய் ஹோப் 11 ரன்கள் என 18.1 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.



Read More

Previous Post

வெளிநாடு பயணம் செய்த இந்தியருக்கு வாழ்த்து… 70களில் வெளியான செய்திதாள் விளம்பரம் வைரல்

Next Post

இரசாயனக் கழிவு சேமிப்பு கிடங்கில் தீப்பரவல் | Makkal Osai

Next Post
இரசாயனக் கழிவு சேமிப்பு கிடங்கில் தீப்பரவல் | Makkal Osai

இரசாயனக் கழிவு சேமிப்பு கிடங்கில் தீப்பரவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin