DBS/POSB ஆகிய வங்கிகள் SG60 திட்டத்தின் ஒரு பகுதியாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு S$3 வரை கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளன.
அதன் வாடிக்கையார்கள் இந்த சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
எந்தந்த கடைகளில்?
- உணவங்காடிகள் (hawker stalls)
- ஈர சந்தைகள் (wet markets)
- குடியிருப்புகளில் உள்ள கடைகள் (heartland shops)
மேற்கண்ட கடைகளில் நீங்கள் செலவிடும் பணத்தில் இருந்து $3 வரை கேஷ்பேக் சலுகையாக திரும்ப பெறலாம்.
என்னென்ன சலுகைகள்?
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் DBS PayLah! மூலம் செலுத்தும் தொகைக்கு ஏற்ப இந்த சலுகையை பெறலாம்.
குறிப்பாக இந்த கேஷ்பேக் சலுகை வரும் செப்டம்பர் 27 வரை செயலில் இருக்கும்.
முதல் 160,000 வாடிக்கையார்களுக்கு மட்டுமே இந்த சலுகை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 கிலோ அரிசி மூட்டை மற்றும் 500 மி. எண்ணெய் பாட்டில் ஆகியவற்றுக்கு S$0.60 என்ற விலை சலுகையும் உள்ளது, இது ஷெங் சியோங் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்.
DBS/POSB ஆகியவற்றின் எதாவது ஒரு வங்கி கணக்கில் சம்பளத்தை வரவு வைக்கும் சிங்கப்பூரர்களுக்கு S$300 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
SG60 திட்டத்தின் ஒரு பகுதியாக, DBS/POSB ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு உதவும் எண்ணத்தில் S$23 மில்லியன் மதிப்புள்ள சேமிப்பை வழங்கவுள்ளன.
இது வாடிக்கையாளர்களின் வாழ்க்கை மற்றும் வர்த்தக செலவுகளைக் குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது.
29 ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி.. தலையிட்ட MOM – முதலாளிகளுக்கு நினைவூட்டல்
