(கோகி கருணாநிதி)
ஜோகூர்:
ஜோகூர் மாநில 16வது சட்டமன்ற் தேர்தலில் பெர்லிங் சட்டமன்றத் தொகுதி இம்முறை மும்முனைப் போட்டியைக் காண்கிறது. பாரிசான் நேஷனல் சார்பில் பன்னீர் செல்வம் (ம.இ.கா.), பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஆலன் டீ, பெர்சாமா கட்சி சார்பில் பூ வேய் ஹான் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
கடந்த மாநிலத் தேர்தலில் இந்தத் தொகுதி பாரிசான் நேஷனல் கூட்டனியில் ம.சீ.ச விற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறை பெர்லிங் தொகுதி ம.இ.கா-விற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இதற்கு மாற்றாக ம.இ.கா. தனது பாரம்பரியமான தெங்காரோ தொகுதியை அம்னோவுக்கு விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
பெர்லிங் தொகுதி நீண்டகாலமாக ஜனநாயக செயல் கட்சியின் டி.ஏ.பி வலுவான ஆதிக்கப் பகுதியாகக் கருதப்பட்டு வந்த நிலையில், இம்முறை ம.இ.கா. வேட்பாளர் களமிறங்குவது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், இந்தத் தொகுதியின் தேர்தல் களம் மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியுள்ளதுடன், வாக்காளர்களின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது



