இதில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள கியூருசாவ், இறுதிப் போட்டியில் ஜமைக்காவுடன் மோதியது. ஏற்கெனவே இப்பிரிவில் முதல் இடத்தில் இருந்த கியூருசாவ், தான் கோல் அடிக்காவிட்டாலும் பரவாயில்லை, 2ஆவது இடத்தில் உள்ள ஜமைக்கா கோல் அடிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும் என்ற முனைப்புடன் விளையாடியது. இதில், இரு அணிகளும் கோல் எதுவும் எடுக்காமல் ஆட்டம் டிரா ஆனது. இதன் மூலம், உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற பெருமையை கியூருசாவ் பெற்றுள்ளது.


