Last Updated:
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 208 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குவித்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 208 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குவித்துள்ளது.
ஐபிஎல் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் – ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.
3-வது ஓவரில் 22 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார் ருதுராஜ். அடுத்து வந்த சர்ஃபராஸ் கான் 6வது ஓவரில் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஷிவம் துபே நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்களில் அவரும் கிளம்பினார். 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 111 ரன்களை குவித்தது.
தொடர்ந்து டெவால்ட் பிரெவிஸ் 21 ரன்கள், கார்த்திக் ஷர்மா 18 ரன்கள், ஜேமி ஓவர்டன் 15 ரன்களில் அவுட்டாக ஒற்றை ஆளாக நின்று மிரட்டலாக விளையாடினார் சஞ்சு சாம்சன். 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 207 ரன்களை குவித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில், அல்லா கசன்ஃபர், அஷ்வனி குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சாட்னர், பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


