Last Updated:
இந்த முறை தோனி, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட சில வீரர்களைத் தவிர்த்து அதிக அறிமுகம் இல்லாத வீரர்களைக் கொண்டு சென்னை அணி களம் காண்கிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு மினி ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை அணியில் ப்ளேயிங் 11 இல் இடம் பிடிக்க போகும் 4 வெளிநாட்டு வீரர்கள் யார் என்பது குறித்து விவாதம் சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐபிஎல் விதிப்படி ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் 7 இந்தியர்கள் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். அவர்களைத் தவிர்த்து நான்கு வெளிநாட்டு வீரர்கள் அணிகளில் இடம்பெறலாம். இந்நிலையில் சென்னை அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருப்பதால் பிளேயிங் 11 திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கடந்த சீசனில் சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் டெவால்ட் ப்ரெவிஸ் ப்ளேயிங் 11 இல் லெவனில் இடம் பெறுவார். இதேபோன்று டி20 போட்டிகளில் கலக்கி வரும் நாதன் எல்லீஸ் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்று உறுதியாக கூறலாம். இவர் கடந்த சீசனில் எதிரணியை கடுமையாக திணறடித்து வந்தார். இந்த மூன்று பேரை தவிர்த்து அகில் ஹுசைன் அல்லது மேட் ஹென்றி என இவர்களில் ஒருவர் சென்னை அணியில் இடம் பெறலாம்.


