பொதுவாக நாடாளுமன்றங்களில் வர்த்தகம், ராணுவம், வரி விதிப்பு போன்றவற்றிற்குத்தான் மசோதாக்கள் கொண்டு வரப்படும். ஆனால் அடுத்த நாட்டின் தலைவர்களைக் கொலை செய்பவர்களுக்குப் பரிசு வழங்குதல் என்ற பெயரில் ஒரு சட்ட மசோதாவைக் கொண்டு வருவது சர்வதேச ராஜதந்திர வரலாற்றிலேயே மிக விசித்திரமான மற்றும் அபூர்வமான ஒன்றாகும். இந்த மசோதா ஈரானிய சட்டப் புத்தகங்களில் அதிகாரப்பூர்வமாக இடம் பெற உள்ளது. ஈரான் அறிவித்துள்ள இந்த 58 மில்லியன் டாலர், வெறும் அரசுப் பணம் மட்டுமல்ல, மதக் குழுக்கள், அரசு ஆதரவு ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் சிலரிடம் இருந்தும் Crowdfunding முறையில் நிதி திரட்டப்பட்டு, Joint Fund உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


