03
மொபைல் பில் பேமென்ட்ஸ்கள் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்துமா?: இந்தியாவை பொறுத்தவரை உங்கள் மொபைல் பில்லை சரியான நேரத்தில் செலுத்துவது, உங்கள் கிரெடிட் ஸ்கோரில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தாது. CIBIL, Experian, Equifax மற்றும் CRIF High Mark போன்ற முன்னணி கடன் தகவல் நிறுவனங்கள், ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர்களை கணக்கிடும்போது, அந்த நபரின் கடன் தொடர்பான பரிவர்த்தனைகளில் அவரின் கடனை சரியாக திருப்பிச் செலுத்தி உள்ளாரா? கிரெடிட் கார்டு பில்களை முறையாக செலுத்துகிறாரா? மற்றும் கடன் பயன்பாட்டு விகிதங்கள் போன்றவற்றில்தான் முதன்மையாக கவனம் செலுத்துகின்றன.