அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு கடன் கொடுத்தால், அவர்கள் கடனை பொறுப்புடன் திருப்பி செலுத்துவார்கள் என்பதே இதன் பின்னணியில் உள்ள அடிப்படையான விஷயம். ஒரு நபரின் கிரெடிட் தகவல் பற்றிய தீவிரமான பகுப்பாய்வு மூலமாக இந்த ஸ்கோர் வழங்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை TransUnion, CIBIL, Experian, Equifax மற்றும் CRIF High Mark போன்றவர்கள் தனிநபர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் வழங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
குறைவான அல்லது எந்த ஒரு கிரெடிட் வரலாறும் இல்லாத ஒரு நபர் தன்னுடைய கிரெடிட் ப்ரோபைலை எப்படி வலுப்படுத்தலாம்?
கிரெடிட் வரலாறு இல்லாதவர்கள்:
இதற்கு முன்பு எந்த ஒரு கடனும் வாங்காமல், கிரெடிட் வரலாறு இல்லாமல் இருக்கக்கூடிய நபர்களுக்கு அடமானமாக ஒரு ஃபிக்சட் டெபாசிட் மூலமாக கிரெடிட் கார்டு அல்லது ஒரு சிறிய அளவிலான கடன் போன்றவை நல்ல ஆரம்பப் புள்ளியாக இருக்கும். இதனை பொறுப்புடன் பயன்படுத்தி குறைவான பேலன்ஸ் மற்றும் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் நிச்சயமாக அதிகரிக்கும்.
குறைவான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்கள்:
குறைவான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்கள் தங்களுடைய ஸ்கோரை அதிகரிப்பதற்கு தொடர்ச்சியான பொருளாதார நடத்தையில் ஈடுபட வேண்டும். இதற்கான முதல் படி என்பது உங்களுக்கு குறைவான ஸ்கோர் வழங்கப்பட்டதற்கு பின்னணியில் உள்ள அடிப்படை காரணத்தை கண்டுபிடிப்பது. அது கடனை திருப்பி செலுத்த தவறுதல் அல்லது இதற்கு முன்பு இருக்கும் கடந்த கால டியூ போன்றவை அடங்கும். இதன் பிறகு உங்களுடைய பேலன்ஸை குறைப்பது மற்றும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் வரம்பை முழுவதுமாக பயன்படுத்துவது போன்றவை அடங்கும்.
கிரெடிட் அறிக்கைகளை கண்காணித்தல் வழக்கமான முறையில் கிரெடிட் ரிப்போர்ட்டுகளை ஆய்வு செய்வது:
ஏதேனும் தவறுகள் அல்லது அதிகாரப்பூர்வமற்ற செயல்பாடுகள் நடைபெற்று இருப்பதை அடையாளம் கண்டு, அதனை சரி செய்வதற்கு இது உதவும். தொடர்ச்சியான முயற்சி மூலமாகவும், சரியான பொருளாதார நடத்தைகள் மூலமாகவும் ஒருவர் தன்னுடைய கிரெடிட் ப்ரொபைலை வலிமையாக்கலாம்.
இதையும் படிக்க: ரூ.10, ரூ.500 நோட்டுக்களில் வரப்போகும் மாற்றம்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
கிரெடிட் ஸ்கோரை பாதிக்கக்கூடிய சில முக்கியமான விஷயங்கள்:
கடன் மற்றும் கிரெடிட் கார்டு பேமென்ட்களை சரியான நேரத்தில் செலுத்துவது மிகவும் அவசியம். இதில் ஏதேனும் தாமதம் அல்லது பேமெண்ட்களை செலுத்த தவறிவிட்டால் அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம்.
கிரெடிட் மிக்ஸ்:
எப்பொழுதுமே செக்யூர்டு மற்றும் அன்செக்யூர்டு ஆகிய இரண்டு லோன்களையும் நீங்கள் சமமாக வாங்க வேண்டும். ஹோம் அல்லது ஆட்டோ லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவை இதில் அடங்கும். இப்படி இருக்கும்போது நீங்கள் எந்தவகையான கடனையும் பொறுப்புடன் கையாளுவீர்கள் மற்றும் புத்திசாலித்தனமான பொருளாதார தேர்வுகளை செய்வீர்கள் என்பது கடன் வழங்குனர்களுக்கு தெரியவரும்.
கிரெடிட் வரலாற்றின் நீளம்:
உங்களுக்கு நீளமான அல்லது பல வருடங்களுக்கு கிரெடிட் வரலாறு இருக்கும்போது, அது கடன் வழங்குனர்களிடையே உங்கள் மீது ஒரு நம்பிக்கையை உருவாக்குகிறது.
April 07, 2025 3:48 PM IST
Credit score | குறைவான அல்லது கிரெடிட் ஸ்கோர் இல்லாதவர்கள் வலிமையான கிரெடிட் ப்ரொபைலை உருவாக்க என்ன செய்யலாம்…? டிப்ஸ் இதோ…!

