கட்டுக்கதை:
உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்க்கும்போது அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம்.
உண்மை:
உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை நீங்களே சரிபார்ப்பது என்பது ‘சாஃப்ட் என்கொயரி’ என்று அழைக்கப்படுகிறது. இதனால், உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது.
கட்டுக்கதை:
உங்களுடைய வருமானம் உங்களது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம்.
உண்மை:
உங்கள் கிரெடிட் ஸ்கோர் என்பது நீங்கள் கடனை எப்படி பொறுப்புடன் நிர்வகிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் அமையுமே தவிர, உங்களுடைய வருமானத்தைப் பொறுத்து இருக்காது. எனவே, வருமானம் என்பது ஒருபோதும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது.
கட்டுக்கதை:
அதிக எண்ணிக்கையில் கடன் அக்கவுண்டுகளை வைத்திருந்தால் கிரெடிட் ஸ்கோர் அதிகமாகும். அதிக கிரெடிட் அக்கவுண்டுகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும்போது கடன் வழங்குனர்கள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை தெரிந்து கொள்வதற்காக ‘ஹார்ட் என்கொயரி’-ல் ஈடுபடுவார்கள். இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை குறைக்கலாம்.
கட்டுக்கதை:
பழைய கடன் அக்கவுண்டுகளை மூடிவிட்டால் கிரெடிட் ஸ்கோர் அதிகமாகும்.
உண்மை:
பழைய அல்லது பயன்படுத்தப்படாத கடன் அக்கவுண்டுகளை மூடுவது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கும். நீளமான கிரெடிட் வரலாறு என்பது உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
கட்டுக்கதை:
குறைவான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களால் கடன் வாங்க முடியாது.
உண்மை:
குறைவான கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்களும் கடன் வாங்கலாம். ஆனால், இவர்களுக்கான ஆப்ஷன்கள் குறைவாக இருக்கும். எனினும், உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்படுவதில் குறைவான கிரெடிட் ஸ்கோர் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பதற்கான சில டிப்ஸ்:

