Last Updated:
Credit Card Payments | குறித்த தேதிக்குள் பில் பேமென்ட்களை செலுத்த தவறுவதால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறையலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பொதுவாக கிரெடிட் கார்டு யூசர்கள் தங்களுடைய பில்களை சரியான நேரத்தில் செலுத்த தவறுவது யதார்த்தமான விஷயம்தான். எனவே, இதற்குப் பின்னணியில் உள்ள காரணம் என்னவாக இருக்கும்? ஒருவேளை அவர்கள் பில்லை செலுத்துவதற்கு மறந்து போகலாம் அல்லது பில்லுக்கான பேமென்ட் செலுத்துவதற்கு அவர்களிடம் போதுமான தொகை இல்லாமல் போகலாம்.
ஆனால், குறித்த தேதிக்குள் பில் பேமென்ட்களை செலுத்த தவறுவதால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறையலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறித்த காலகட்டத்திற்குள் பேமென்ட்களை செலுத்தாமல், அதன் பிறகு நீங்கள் அதனை செலுத்தினால்கூட உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படும். எனவே இது நடக்காமல் இருப்பதற்கு நீங்கள் SBI கார்டில் ஆட்டோ பே (Auto Pay) ஆப்ஷனை எனேபிள் செய்து கொள்ளலாம். அதனை எப்படி செய்வது என்பதற்கான படிப்படியான வழிமுறையை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆட்டோ பே ஆப்ஷனை அமைப்பதற்கான படிகள்:
- முதலில் நீங்கள் SBI கார்டு அப்ளிகேஷனுக்குள் நுழைய வேண்டும். அதில் ‘ரீசார்ஜ் அண்ட் பில் பேமென்ட்ஸ்’ அல்லது ‘இ-ஸ்டோர்’ என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.
- அடுத்து ‘பில் பேமென்ட்ஸ் அண்ட் ரீசார்ஜ்’ என்பதை தேர்வு செய்யுங்கள்.
- டிஸ்கிளைமரை படித்து தெரிந்துகொண்டு ஹோம் பேஜுக்கு செல்லுங்கள்.
SBI கார்டு: ஆட்டோ பே உருவாக்குவதற்கான ஆப்ஷன்:
- பில் பே ஹோம் பேஜில் உள்ள ‘ஆட் பில்லர்’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
- ‘பில் கேட்டகிரி’ என்பதை தேர்வு செய்யுங்கள்.
- இப்போது முதல் 3 எழுத்துக்களை தேர்வு செய்துவிட்டு, பில்லை தேர்வு செய்யுங்கள்.
- அடுத்து உங்களுடைய கார்டு விவரங்களை என்டர் செய்துவிட்டு, பில்லரை சேர்க்கவும்.
- அடுத்தபடியாக உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்ட OTP-ஐ என்டர் செய்து, பில்லரை ஆட் செய்யவும்.
இதையும் படிக்க: Personal Loan | பர்சனல் லோன்களுக்கான வட்டி விகிதங்களை பேரம்பேசி குறைக்க சான்ஸ் இருக்கா…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…
இதனை எடிட் செய்வது எப்படி?
- இதற்கு நீங்கள் முதலில் ‘மை பில்லர்ஸ்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது நீங்கள் எடிட் செய்ய நினைக்கும் பில்லரை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு புள்ளி புள்ளியாக காணப்படும் கோட்டை கிளிக் செய்துவிட்டு, ‘எடிட்’ என்பதை தேர்வு செய்யுங்கள்.
- இப்போது உங்களுக்குத் தேவையான மாற்றங்களை செய்து ‘கன்ஃபார்ம் அண்ட் மாடிஃபை’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
- உங்களுடைய போனில் அனுப்பி வைக்கப்பட்ட OTP மூலம் வெரிஃபை செய்யவும்.
இதையும் படிக்க: Gold loan | வங்கிகள் மற்றும் NBFC-கள் கோல்டு லோனுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள்…!
ஒருவேளை நீங்கள் ஆட்டோ பே ஆப்ஷனை டெலிட் செய்ய நினைத்தால் பின்வரும் படிகளை பின்பற்றலாம்:
- பில்லருக்கு அடுத்து உள்ள புள்ளியாலான கோட்டை கிளிக் செய்யவும்.
- ‘டெலிட்’ என்பதை தேர்வு செய்யுங்கள்.
- பிறகு கார்டு விவரங்களை உறுதி செய்துவிட்டு, பில்லரை அகற்றுவதற்கு OTP-ஐ என்டர் செய்ய வேண்டும்.
April 21, 2025 9:27 PM IST
Credit Card Payments | கிரெடிட் கார்டு பேமென்ட் பண்ண அடிக்கடி மறந்து போயிடுறீங்களா…? அப்படின்னா இதை செய்யுங்க…!


