குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சூழலில், டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக மூத்த தலைவர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.


