கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படும் என்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வு தவறானது என ஐ.சி.எம்.ஆர். விளக்கம் அளித்துள்ளது.
இங்கிலாந்து மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா
(AstraZeneca) கொரோனா தடுப்பூசிகளால் சில பக்க விளைவுகள் ஏற்படும் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான ‘கோவாக்சின்’ செலுத்திக்கொண்ட சிலரிடம் பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. அதில் 30 சதவீதம் பேருக்கு நரம்பியலில் பாதிப்பு, தோல் நோய், மூட்டு இணைப்பு, சதைப்பிடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டதாக அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி குறித்து, பனாரஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்விற்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. சீரற்ற ஆய்வு முறைகளை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐசிஎம்ஆர், பக்க விளைவு இருப்பதாக தெரிவித்திருப்பதால், ஆய்வு முடிவை திரும்ப பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆய்வு முடிவுகளில் ஐசிஎம்ஆர் பெயரை நீக்க வேண்டும் எனவும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
அதேபோல் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என AstraZeneca நிறுவனம் ஒப்புதல் அளித்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்களிடம் பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் 30% பேருக்கு நரம்பியலில் பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் இருப்பதக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும் கோவாக்சின் குறித்து பனாரஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கு ஒப்புதல் பெறவில்லை எனவும், சீரற்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆய்வு முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அதேபோல் ஆய்வு முடிவுகளில் ஐ.சி.எம்.ஆர் பெயரை நீக்க வேண்டும் என்றும், ஆய்வை திரும்ப பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
