Last Updated:
இதில் தஞ்சை திருச்சி திருவாரூர் ஈரோடு சென்னை நாமக்கல் உள்ளிட்ட 38 மாவட்டங்களை சேர்ந்த 38 அணியிலிருந்து 684 பங்கேற்றனர் .
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டியினை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார்.
2025-26 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்த நிலையில், கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநில அளவிலான கால்பந்து போட்டி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. போட்டியை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் தஞ்சை, திருச்சி, திருவாரூர், ஈரோடு, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட 38 மாவட்டங்களைச் சேர்ந்த 38 அணியிலிருந்து 684 பேர் பங்கேற்றனர். அக்டோபர் 3-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி வருகின்ற ஏழாம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் நடைபெற்ற ஆட்டத்தில் நாமக்கல், தென்காசி அணிகள், ஈரோடு, கோவை அணிகள் பங்கேற்றன.
போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு ஒலிம்பியன் கால்பந்து முன்னாள் வீரர் சைமன் சுந்தர்ராஜன் உற்சாகப்படுத்தி போட்டியினை தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெறக்கூடிய முதல் பரிசாக தலா 75 ஆயிரம், இரண்டாம் பரிசாக ஐம்பதாயிரம், மூன்றாம் பரிசாக 25,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துவக்க விழாவில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் வில்சன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
October 04, 2025 1:12 PM IST

