நட்டாற்றில் விட்டு விட்டது ஆவின் நிர்வாகம்: பொன்னுசாமி
ஆனால் பால் முகவர்களின் அந்த நிம்மதியும், மகிழ்ச்சியும் ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை காரணம் நேரடியாகவும், மறைமுகமாகவும் லிட்டருக்கு 11.00ரூபாய் ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டின் விற்பனை விலை உயர்த்தப்பட்ட நிலையில் திருவள்ளூர் – காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள பால் முகவர்களுக்கு மட்டும் “கிரீன் மேஜிக் ப்ளஸ்” பால் பாக்கெட் விற்பனைக்கான கமிஷன் தொகையை லிட்டருக்கு 1ரூபாய் 10காசுகள் உயர்த்தி வழங்கி விட்டு சேலம், கோவை ஒன்றியங்களில் உள்ள பால் முகவர்களை அம்போவென நட்டாற்றில் விட்டு விட்டது ஆவின் நிர்வாகம். குறிப்பாக சேலம், கோவை ஒன்றியங்களில் கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்காமல் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் விற்பனை கமிஷன் தொகையையே (சேலம் 5%, கோவை 4.1%) “கிரீன் மேஜிக் ப்ளஸ்” பால் பாக்கெட் விற்பனைக்கும் வழங்கி வருவதும், அதனை கேள்வி எழுப்பும் பால் முகவர்களை ஆவின் நிர்வாகம் தொடர்ந்து மிரட்டி வருவதும் “ஒரு கண்ணில் சுண்ணாம்பு மற்றொரு கண்ணில் வெண்ணெய்” என்பதை போல அமைந்துள்ளது. ஆவின் பால் என்பது ஒரே வணிக பெயராக இருந்தாலும் தமிழ்நாடு முழுவதும் ஒரே நிலைப்பாடு இல்லாமல் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாறுபாடான நிலைப்பாடு கொண்டு பால் முகவர்களை நம்ப வைத்து ஏமாற்றுவது போல் செயல்படுவது என்பது ஏற்புடையதல்ல.

