அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio), “ஈரானை முடக்க நாங்கள் சீனாவின் உதவியைக் கேட்கவில்லை, அவர்களின் உதவி எங்களுக்குத் தேவையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். ஆனால், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer), “ஹார்முஸ் விவகாரத்தில் சீனா தவறான பக்கத்தில் நிற்கக் கூடாது, ஹார்முஸ் நீரிணை திறந்திருப்பது சீனாவிற்கும் முக்கியம்” என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அமெரிக்க பிரதிநிதிகளின் இந்த முரண்பட்ட கருத்துக்கள் அமெரிக்காவின் பதற்றத்தைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


