Last Updated:
படகுகளில் சென்று மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழையால் சீனாவின் குவாங்சி மாகாணத்தை வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது.
சீனாவின் கின்சோ (Qinzhou) நகரில் நேற்று (ஏப்ரல் 27) அதிகாலை 4 மணியளவில் ஒரு மணி நேரத்தில் மட்டும் 160 மில்லி மீட்டர் மழை பெய்தது. 8 மணி நேரத்தில் மட்டும் 273 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது ஏப்ரல் மாத மழைப் பொழிவை விட மிக அதிகம் ஆகும்.
Qinzhou, Guangxi, China is experiencing extreme rainfall that has caused flooding today.
273 mm in 8 hours, three times the extreme storm threshold.
160 mm in 1 hour, nearing world-record intensity.
Previous April records for the region have been broken. pic.twitter.com/7lel2xRWSE
— Weather Monitor (@WeatherMonitors) April 27, 2026
இந்த திடீர் மழையால் காணும் இடம் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகள் எங்கும் ஆறுகளாக காட்சி அளித்தன. வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தன. நகரின் வீதிகள், கடைகள் மற்றும் தாழ்வான குடியிருப்புகளில் வெள்ளம் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது. படகுகளில் சென்று மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். நிலைமை மோசமடைந்ததை அடுத்து அவசர கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Apr 28, 2026 10:33 AM IST


