பண்ணையைப் பராமரிப்பது, பன்றிகளுக்குத் தீவனம் வைப்பது, அவற்றுக்கு அவ்வப்போது உடை அணிவிப்பது என தனது அனுபவங்களை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பிரபல வீடியோ தளத்தில் பதிவிட ஆரம்பித்தார். இணையத்தில் அந்த வீடியோக்கள் நல்ல வரவேற்பைப் பெறவே, அதன்மூலம், 1.2 மில்லியன் followers-களை அவர் பெற்றார். இத்தகைய சூழலில், ஜனவரி 6-ம் தேதி உறைந்த ஏரியில் யாங் மீன் பிடிக்கும்போது காலில் அடிபட்டது. தற்போது அவர் தனது பெற்றோருடன் ஒன்றாக மகிழ்வாக இருக்கிறார்.
இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பன்றி வளர்ப்பு, கால்நடைகள் விற்பனை மற்றும் சோசியல் மீடியா மூலம் ரூ. 22.8 லட்சத்துக்கு மேல் யாங் வருமானம் ஈட்டியிருக்கிறார். இதன்மூலம், யாங் அடுத்தகட்டமாகப் பண்ணையை விரிவுபடுத்தவும், எதிர்காலத்தில் ஒரு ஹோட்டலை நிறுவவும் திட்டமிட்டிருக்கிறார்.
தன்னுடைய இத்தகைய வளர்ச்சி குறித்து பேசியிருக்கும் யாங், “எனது பெற்றோர் எப்போதும் எனக்கு நல்லவற்றையே சொன்னார்கள். ஒருகட்டத்தில், எனது பெற்றோரை விட்டுத் தொலைவில் இல்லாமல், அவர்களுக்கு அருகில் இருக்க விரும்பினேன். இப்போது, பன்றிப் பண்ணையில் கடுமையாக உழைக்கிறேன். ஒவ்வொரு நாளும் முதுகு, இடுப்பில் வலி இருக்கும். உடல் மேல் துர்நாற்றம் வீசும். இருந்தாலும், என் பெற்றோருடன் என்னால் இருக்க முடியும். இப்போது நான் மகிழ்வாகவும் நிறைவாகவும் இருக்கிறேன்.” என்றார். யாங்கின் இந்த வளர்ச்சி சீன சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

