மேலும் இதற்காக ஊழியர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. விதிகளை ஏற்காத ஊழியர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வேலை நேரத்தில் ஊழியர்கள் விளையாடுவதை கண்டால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
தகவலின்படி சிற்றுண்டி சாப்பிட்டால் மேலாளர்களுக்கு ரூ.23,981 (2,000 யுவான்), மேற்பார்வையாளர்களுக்கு ரூ.11,990 (1,000 யுவான்) மற்றும் உதவி மேலாளர்களுக்கு ரூ.5,995 (500 யுவான்) அபராதம் விதிக்கப்படும்.
சரியான காரணமின்றி மூன்று முறைக்கு மேல் பணியிடத்தில் இல்லாமல் இருப்பதற்கு ரூ.23,981 (2,000 யுவான்) சம்பளக் குறைவு ஏற்படும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். இது போன்ற விதிகளால் அந்த நிறுவனம் சர்ச்சை சிக்கியுள்ளது.

